தவெகவிற்கு அதிமுக ஆதரவு? கோவை சத்யன் சொன்ன மேட்டர்.. பாஜகவை கழற்றிவிடும் எடப்பாடி பழனிச்சாமி?
சென்னை: ''விஜய்க்கு ஆதரவளிப்பது பற்றி அதிமுக பரிசீலனை செய்யலாம். இளைஞர்களின் எண்ணத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். இன்று மாலை வரை நீங்கள் காத்திருங்கள். தற்போது பந்து விஜய்யின் கோட்டில் உள்ளது. விஜய்யின் கனவு உண்மையாக வேண்டும் என்றால் அவர் தான் வர வேண்டும்'' என அதிமுகவின் தேசிய செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.இதன்மூலம் விஜய் ஆதரவு கோரினால் அதிமுக அதுபற்றி பரிசீலனை செய்யலாம் என்பதை கோவை சத்யன் வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய்யின் தவெக தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்றாலும் கூட தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதவிர 2 கம்யூனிஸ்ட், விசிகவிடம், தவெக ஆதரவு கோரி உள்ளது.

இதற்கிடையே தான் அதிமுகவில் ஒரு தரப்பினர் விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், இன்னொரு தரப்பினர் கூட்டணி வேண்டாம் என்றும் கூறி வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டவர்கள் அதிமுக எம்எல்ஏக்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரபரப்புக்கு நடுவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைதி காத்து வருகிறார். இதனால் அதிமுக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு வழங்குமா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பதற்கான சிக்னலை அதிமுக கொடுத்துள்ளது. இதுபற்றி அதிமுகவின் தேசிய செய்தி தொடர்பாளர் கோவை சத்தியன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '' இளைஞர்களின் எண்ணத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். இன்று மாலை வரை நீங்கள் காத்திருங்கள். தயவு செய்து இன்று மாலை வரை காத்திருக்க வேண்டும். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. அனைவரும் ஒன்றாக, ஒருமித்த கருத்தில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை மேலிடம் தான் எடுக்கும்'' என்றார்.
#WATCH | Chennai, Tamil Nadu: On being asked if AIADMK will extend support to TVK, AIADMK Spokesperson Kovai Sathyan says, "The ball is in Mr Vijay's court. The majority decision will be taken by the high command. If he has to turn the dream into reality, it has to come from Mr… pic.twitter.com/G1ezhI7Ge0
— ANI (@ANI) May 6, 2026
இந்த வேளையில் விஜய்யின் தவெகவிற்கு, அதிமுக சப்போர்ட் செய்யுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோவை சத்யன், ''தற்போது பந்து விஜய்யின் கோட்டில் உள்ளது. விஜய்யின் கனவு உண்மையாக வேண்டும் என்றால் அவர் தான் வர வேண்டும்'' என்றார். இதன்மூலம் விஜய் ஆதரவு கோரினால் அதிமுக அதுபற்றி பரரிசீலனை செய்யலாம் என்பதை கோவை சத்யன் வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய்யை எடுத்து கொண்டால் பாஜக இல்லாத அதிமுகவை விரும்புகிறது. இதனால் இந்த விவகாரத்தில் அதிமுகவின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஒருவேளை தவெகவிற்கு ஆதரவு வழங்கினால் பாஜகவை கழற்றிவிடுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியை கோவை சத்யன் விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக கோவை சத்யன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ''காங்கிரஸ் என்பது கைவிடப்பட்ட கட்சியின் மறுஉருவம். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களால் தவெகவின் 108 பேரையும், அரசையும் காப்பாற்ற முடியாது. திமுகவிடம் இருந்து விவாகரத்து பெற விரும்பினால் அதற்கு கொஞ்சம் முதுகெலும்பு இருக்க வேண்டும்'' என்று கூறி சீண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
---












Click it and Unblock the Notifications