வெள்ளந்தி மனிதர்.. மனதில் பட்டதை சொல்பவர்.. தேமுதிகவை செமையாக கலாய்த்தவர்.. அவர்தான் கனகராஜ்
Recommended Video

சென்னை: மறைந்த சூலூர் எம்எல்ஏ கனகராஜ் ரொம்பவே வெள்ளந்தி மனிதர். யதார்த்தமாக பேசக்கூடியவர். இப்படித்தான் அவர் சமீபத்தில் தேமுதிகவை கலாய்த்து பேசிய ஒரு வார்த்தையும் வைரலாக சுற்றி வந்தது.
இம்மாத துவக்கத்தில், அநேகமாக 9ம் தேதியாக இருக்கலாம். அதிமுகவுடன் கூட்டணி சேர தேமுதிக முயற்சி செய்த காலகட்டம் அது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்புதான், பேட்டியளித்த தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக எம்பிக்களையும், ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வெளிப்படையாக அதை காட்டவில்லை. ஆனால், கனகராஜ் தனது மனதில் பட்டதை அப்படியே போட்டு உடைத்துவிட்டார்.

சரியில்லை
அவர் அப்போது சொன்னது மீண்டும் உங்கள் பார்வைக்கு.. தேமுதிக, தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி பேசுவது மிகப்பெரிய தவறு. இங்கொன்றும், அங்கொன்றுமாக பேச்சுவார்த்தை நடத்துவது முறையான நடைமுறை கிடையாது.

500 ஓட்டு
தேமுதிகவால் தொகுதிக்கு 500 அல்லது 1000 வாக்குகள் கிடைக்கும். அரசியலில் இந்த வாக்குகளும் முக்கியம்தான் என்பதால் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மதிமுகவுக்கு கூட தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் இருக்கும். அவர்களும் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள்.

விஜயகாந்த் செய்தது தப்பு
எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த்தை உயர்த்தியவர் ஜெயலலிதா. ஆனால் சட்டமன்றத்தில் நாகரீகம் இல்லாமல் விஜயகாந்த் நாக்கை துருத்தி நடந்துகொண்டதே தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு இழப்பு
கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்தபோதே, தனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசியவர்தான் கனகராஜ். தனது கட்சிக்கு ஒருவரால் கெட்ட பெயர் என்றால் தாங்க முடியாமல் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தவர்தான் கனகராஜ். அவரது மறைவு, கண்டிப்பாக அதிமுகவுக்கு பெரும் இழப்பு என்பதை மறுக்க முடியாது.
-
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications