ஆஹா..சிவி சண்முகத்துக்கு அடிக்குது யோகம்! எடப்பாடி எடுக்கப் போகும் முடிவு! உட்சகட்ட டென்ஷனில் அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து அதிமுகவில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் சிவி சண்முகம். சட்டசபையிலும் பொது வெளியிலும் நேரடியாகவே எடப்பாடி பழனிச்சாமியை தாக்கி பேசி வருகிறார். முடிந்தால் கட்சியை விட்டு நீக்கி பாருங்கள் என சவாலும் விட்டுளார் இந்த நிலையில் சி.வி.சண்முகத்தை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எந்தவித சிக்கலும் இன்றி எம்.எல்.ஏ. ஆகவே சிவி சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் சூழல் உருவாகி உள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச் செயலாளராக தலைமை ஏற்று நடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோற்றது.

AIADMK

இதனையடுத்து, சட்டசபையில் விஜய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவி சண்முகம், எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆதரவாக வாக்களித்தனர்.

அதிமுக

போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். தற்போது வரை அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளர்கள் அந்தந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே தனது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதும், கட்சியின் அலுவலக சாவியை எடப்பாடியால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளரான பசுபதி தரப்பிடம் ஒப்படைத்தார் சண்முகம்.

விஜயபாஸ்கர்

அதற்கு பிறகு அடிக்கடி தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் . இந்த நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்த சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தல் அவர்கள் மீண்டும் சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவில் இன்னும் ஒரு அதிருப்தி கோஷ்டி இருக்கிறது. சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி தலைமையில் அந்த டீம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எம்எல்ஏக்களாக இருக்கும் சிவி சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.

சிவி சண்முகம்

இதில் வேலுமணி எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிப்பதில்லை. ஆனால் சிவி சண்முகம் எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சட்டசபையில் மட்டுமல்லாது செய்தியாளர்கள் சந்திப்பிலும் சி.வி சண்முகம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்டு வருகிறார். முடிந்தால் பொதுக்குழுவை கூட்டுங்கள்.. முடிந்தால் எங்களை கட்சியில் விட்டு நீக்குங்கள் என பேசி வருகிறார். ஆனால் கட்சியை விட்டு நீக்கினால் அவர் எளிதாக தமிழக வெற்றி கழகத்தில் எம்எல்ஏ ஆக சேர்ந்து விடுவார்கள் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அதனை தவிர்த்து வந்தார்.

கட்சியிலிருந்து நீக்கம்

ஆனால் அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி சிவி சண்முகத்தை பார்த்து பயப்படுகிறார் என அவரது ஆதரவாளர்கள் கிளப்பி விட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி செயற்குழு பொதுக்குழுவுக்கு முன்னால் சி.வி சண்முகம் தரப்பை கட்சியை விட்டு நீக்கலாம் என ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம்

கட்சியிலிருந்து நீக்கினால் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்து விடுவார்கள் என்பதால் சஸ்பென்ஸ் செய்யலாமா என அக்ரி கிருஷ்ணமூர்த்தி இடம் ஆலோசனையில் ஈடுபட்டாராம். அதே நேரத்தில் கட்சியை விட்டு நீக்கினால் விஜய் அரசுக்கு நேரடியாகவே சண்முகம் ஆதரவளிப்பார் அவர் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. அதே நேரத்தில் சிவி சண்முகத்தை நீக்கிவிட்டால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை கட்சியில் வலுவாக இருக்கும் என சிலர் ஆலோசனை சொல்லியுள்ளனர்.

எஸ்பி வேலுமணி

இதற்கிடையே வேலுமணிக்கும் சண்முகம் தரப்புக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சசிகலாவை சேர்க்க வேண்டும் என எஸ்பி வேலுமணி சொன்னதை சிவி சண்முகம் ரசிக்கவில்லை. இதனால் இது தரப்பும் கடந்த சில தினங்களாக பேசிக்கொள்ளவில்லை என்கின்றனர். அதே நேரத்தில் சிவி சண்முகத்தை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டாம் கொஞ்சம் பொறுத்து இருப்போம் என சில முக்கிய சீனியர்கள் ஐடியாவை எடப்பாடிக்கு கொடுத்திருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+