Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாங்க அண்ணே.. சொல்லி வச்ச மாதிரி.. கோவிலுக்கு வந்த திமுக முத்துசாமி - அதிமுக தங்கமணி.. அப்போ அதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோயிலில் அமைச்சர் முத்துசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒரே நேரத்தில் வழிபாடு நடத்தியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது நடப்பதோ மழைக்காலம்.. ஆனால் அதிமுகவிற்கு மட்டும் அது இலையுதிர் காலம். அதாவது இரட்டை இலையில் இருந்து பல இலைகள் உதிர்ந்து விழுந்து வேறு கட்சிக்கு பறந்து செல்லும்.. இலையுதிர் காலம் இது!

ஆம்.. அதிமுகவில் இருந்து வரும் நாட்களில் பல மூத்த தலைவர்கள் வெளியேற முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

thangamani aiadmk

காலி ஆகும் அதிமுக கூடாரம்

அதிமுகவில் இருந்து கடந்த சில நாட்களாகவே பலர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவின் முடிவு பல விவாதங்களை எழுப்பியுள்ளது. அதிமுகவின் முக்கியமான இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர் அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார்.

அதேபோல் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார்.

லிஸ்ட் அதிகரிக்குதே

இப்படி வரிசையாக அதிமுகவில் இருந்து வெளியேறும் தலைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. எங்கடா இங்க இருந்த என் டீமை காணோம் என்று ரியாஸ் கானிடம் மாட்டிக்கொண்ட வடிவேல் தனது அடியாட்களை தேடுவது போல எடப்பாடி பழனிசாமி திரும்பி பார்க்கும் முன் கட்சியில் இருந்து கொத்து கொத்தாக ஆட்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில்தான் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதேபோல் நேற்று கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முக்கிய நிர்வாகியுமான சின்னசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கமணி - முத்துசாமி சந்திப்பிற்கு என்ன காரணம்

இப்படிப்பட்ட நிலையில்தான் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோயிலில் அமைச்சர் முத்துசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒரே நேரத்தில் வழிபாடு நடத்தியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் ஒரே நேரத்தில் கொங்கு திருப்பதி கோயிலில் சந்தித்துக்கொண்டு ஒன்றாக வழிபட்டனர். அதோடு அண்ணே எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா.. உடம்பு எல்லாம் எப்படி இருக்கு என்று நலம் விசாரித்துக்கொண்டனர்.

இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தது பல வியூகங்களை, விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா காலத்தில் இப்படி செய்திருந்தால்.. இந்நேரம் தங்கமணி கோவில் வாசலை தாண்டும் முன் கட்சி ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். இப்போது இருவரும் ஒன்றாக பேசியதால்.. ஏதேனும் கட்சி மாற்றம் அல்லது ஆக்சன் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே கட்சி மாறும் படலம் இனியும் தொடரலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுகின்றன. அதிமுக தரப்பில் விசாரித்ததில் இது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதாவது கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு தலைவர், சென்னையில் இருந்து ஒருவர், டெல்டாவில் இருந்து இருவர் என்று இன்னும் 4-5 தலைகள் விரைவில் திமுக மற்றும் தவெகவிற்கு தாவ போகிறார்கள் என்று கூறப்படும் நிலையில் இந்த கோவில் மீட்டிங் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+