ADMK Candidate list: 164 தொகுதிகளில் அதிமுக போட்டி! வெளியானது உத்தேச வேட்பாளர் பட்டியல்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 164 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அக்கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்று அதிமுக ஐடி விங்கை சேர்ந்த நபர் வெங்கடேஷ் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறு. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிடும் என சொல்லப்படுகிறது.
அதிமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறதாம்.அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் முதல் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
💞அதிமுகவின் முதல் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்❣️🔥 pic.twitter.com/cGSaeElS0C
— S.Venkatesh MBA., (@SVenkateshADMK) February 22, 2026
அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் 95 சதவீதம் உறுதி செய்யப்பட்ட பட்டியல் என்றாலும் இதை அதிகாரப்பூர்வமாக கருத முடியாது.
முதல் கட்ட 41 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்
- எடப்பாடி பழனிசாமி- எடப்பாடி
- கே.பி.முனுசாமி- வேப்பனஹள்ளி
- நத்தம் விஸ்வநாதன்- நத்தம்
- திண்டுக்கல் சீனிவாசன்- திண்டுக்கல்
- எஸ்.பி.வேலுமணி- தொண்டாமுத்தூர்
- தங்கமணி- குமாரபாளையம்
- ஜெயக்குமார்- ராயபுரம்
- சி.வி.சண்முகம் - விழுப்புரம்
- பா.வளர்மதி- ஆயிரம்விளக்கு
- ஆர்.பி. உதயகுமார்- திருமங்கலம்
- சி.விஜயபாஸ்கர்- விராலிமலை
- வைகைச்செல்வன்- அருப்புக்கோட்டை
- தம்பிதுரை- பர்கூர்
- ஆர்.காமராஜ்- நன்னிலம்
- ஓ.எஸ்.மணியன்- வேதாரண்யம்
- கே.பி.அன்பழகன்- பாலக்கோடு
- கே.சி.வீரமணி- ஜோலார்பேட்டை
- எம்.ஆர்.விஜயபாஸ்கர்- கரூர்
- கடம்பூர் ராஜு- கோவில்பட்டி
- கே.டி.ராஜேந்திர பாலாஜி- சிவகாசி
- ஏ.கே.செல்வராஜ்- மேட்டுப்பாளையம்
- செ.தாமோதரன்- கிணத்துக்கடவு
- சோமசுந்தரம்- காஞ்சிபுரம்
- மரகதம் குமாரவேல்- மதுராந்தகம் (தனி)
- சிட்லபாக்கம் ராஜேந்திரன்- தாம்பரம்
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி- கலசப்பாக்கம்
- சேவூர் ராமசந்திரன்- ஆரணி
- உடுமலை ராதாகிருஷ்ணன்- உடுமலை
- பி.பாலகிருஷ்ணா ரெட்டி- ஓசூர்
- கே.சி. கருப்பண்ணன்- பவானி
- பி.ஆர்.செந்தில்நாதன்- சிவகங்கை
- வாலாஜாபாத் கணேசன்- உத்தரமேரூர்
- மதனந்தபுரம் கே.பழனி- ஸ்ரீபெரும்புதூர் (தனி)
- சோழிங்கநல்லூர்- கே.பி.கந்தன்
- ஆர்.கே.ரவிச்சந்திரன்- சாத்தூர்
- எஸ்.அப்துல் ரஹீம்- ஆவடி
- வி.என்.ரவி- விருகம்பாக்கம்
- ஆர்.வரதராஜ்- விருதுநகர்
- எஸ்.ஆர்.கே.அப்பு- காட்பாடி
- கோ.செந்தில் குமார்- வாணியம்பாடி
- டாக்டர் திருப்பதி- திருப்பத்தூர்
இவை அதிகாரப்பூர்வமற்றவை. எனவே அதிமுக சார்பில் வெளியாகும் பட்டியலே சரியானது. 164 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது என்றால் மீதமுள்ள 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.
-
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications