பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் அதிமுக! ட்விஸ்ட் வைக்கும் இடதுசாரிகள்! எடப்பாடி பழனிசாமி உஷார்!
சென்னை: இன்று சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது. இதில் இக்கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை வைத்து, பாஜகவின் என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடத்தி காட்டிய மேஜிக், தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் போதுமான எம்எல்ஏக்களின் பலம் இல்லாததால் விஜய்யால் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதற்காக இடதுசாரிகள் மற்றும் விசிகவிடம் ஆதரவு கேட்டிருக்கிறார்.

இது ஒருபுறம் எனில், மறுபுறம் திராவிட கட்சிகள் பெரிய அதிர்ச்சியில் இருக்கின்றன. ஏறத்தாழ 60 ஆண்டுகால அரசியல் ஒரே தேர்தலில் முடிவுக்கு வருவதை இக்கட்சிகள் விரும்பவில்லை. எனவே, திமுக-அதிமுக கூட்டணி குறித்து யோசிக்க தொடங்கியிருக்கின்றன. இது நடந்தால் தமிழக அரசியலில் பெரிய சலசலப்பு ஏற்படும்.
அதேநேரம் அதிமுக இன்னொரு கணக்கை போட்டிருக்கிறது. அதாவது கட்சி இப்போது மிகவும் பலவீனமாக மாறியிருக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறார். இது அதிமுகவுக்கு இருண்ட காலமாக மாறியிருக்கிறது. எனவே, விஜய் உடன் கூட்டணி வைத்து கட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று மாலை இடதுசாரிகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க இருக்கின்றன. ஆதரவு கொடுத்தால் விஜய் முதலமைச்சராகலாம். ஆதரவு இல்லையெனில், அதிமுக ஆதரவு கொடுக்க திட்டமிட்டிருக்கிறது.
இடதுசாரிகளின் நிலைப்பாட்டை பொறுத்து என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. என்டிஏ கூட்டணியில் கட்சி நீடிப்பதால்தான் தற்போது வரை அக்கட்சியை விஜய் தரப்பு அணுகவில்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியுடன் விஜய் கூட்டணி வைத்தால், அது விஜய்யின் வாக்கு வங்கியை பாதிக்கும்.
இதனை புரிந்துக்கொண்ட அதிமுக தலைமை, பாஜக கூட்டணியிலிருந்து விலகி.. துணை முதலமைச்சர், முக்கிய அமைச்சர் பதவி போன்ற நிபந்தனையோடு விஜய்க்கு ஆதரவளிக்கலாம் என்று பேச்சுக்கள் அடிப்பட்டிருக்கின்றன.
- தவெக - 108
- அதிமுக - 47
- மொத்தம் - 155 (விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் 154)
- ஆட்சி அமைக்க தேவை - 118
எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் விஜய் முதலமைச்சராக தொடர இது சிறந்த யோசனையாக பார்க்கப்படுகிறது.
ட்விஸ்ட் வைக்கும் இடதுசாரிகள்
விஜய் பாஜக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்திருக்கிறார். எனவே விஜய்க்கு ஆதரவு அளிப்பது பிரச்சனையில்லை. ஆனால், கடந்த காலங்களில் இதேபோல திமுகவுக்கு ஆதரவு கொடுத்தப்போது, திமுக அரசு செய்த தவறுகளுக்கு கட்சியும் சேர்ந்து விமர்சனங்களை சந்தித்தது. இப்படி இருக்கையில், விஜய் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அதேபோல செய்ய மாட்டார் என்பதில் என்ன நிச்சயம் இருக்கும்? எனவே இந்த விஷயம் குறித்து இடதுசாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்கள்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications