அதிரடிக்கு தயாராகும் அதிமுக.. நவம்பர் 20-ம் தேதி ஆலோசனை கூட்டம்.. தலைமை கழகம் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவம்பர் 20-ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2021 சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கி உள்ளது. மு. க அழகிரி கூட்டம், உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை, திமுக கூட்டம் என்று இந்த வார இறுதியில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடக்க உள்ளது.

AIADMK to hold meeting on November 20

சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் இப்போதே வகுக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 20-ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு நடைபெறும். தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும், பல்வேறு அரசியல் திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+