அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலையில் இதுவரை 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது இன்னும் 146 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி வெளியில உள்ள இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் சொல்கின்றன
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது 2026 சட்டமன்ற தேர்தல் களம். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி.

மிக வலுவாக இருக்கும் திமுக கூட்டணியை எதிர்கொள்ள நிச்சயம் பெரும் கூட்டணி பலமும் வாக்கு வங்கியும் அவசியம் என்பதோடு, தேர்தல் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதும் அவசியம் என்பதால் அதனை கச்சிதமாக செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திமுக தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டாலும், கடைசி நேரத்தில் தள்ளாடி வருகிறது. அதே நேரத்தில் தாமதமாக வேலைகளை ஆரம்பித்தாலும் முன்னணியில் தற்போது இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இருக்கிறது. பேச்சுவார்த்தைகளில் பிரச்சனை, பாஜக அதிகம் தொகுதிகள் கேட்கிறது என பல தகவல்கள் உலா வந்த நிலையில் அதையெல்லாம் முறியடித்து ஒரே நாளில் கூட்டணி பங்கிட்டை முடித்திருக்கிறார்.
மேலும் எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை அறிவித்துவிட்டு எந்த சின்னத்தில் போட்டி? யார்? யார்? வேட்பாளர்கள் என்பதை அந்த கட்சிகளின் கைகளில் கொடுத்துவிட்டார். இதன் மூலம் கூட்டணி சிக்கல் இல்லாமல் எடப்பாடி பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்ட நிலையில் அதிமுக வேட்பாளர்கள் யார்? என்ற கேள்வி எழுந்தது. தற்போதைய சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
அதில் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, சி.வி சண்முகம், எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 23 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் 146 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே நேர்காணல் முடிவடைந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரின் கருத்து கேட்கப்பட்டு தொகுதி பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்து இரண்டு கட்டங்களாக மீதம் உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி அதிமுகவின் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். இதில் மீதமுள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், புதுமுகங்கள், இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இறுதி வாக்காளர் பட்டியலை வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அதாவது, மார்ச் 30க்குள் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார் என்கின்றனர். மேலும் சில தாமதங்கள் ஏற்பட்டால் கூட ஏப்ரல் ஒன்று அல்லது இரண்டாம் தேதி 169 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு விடுவார் என்கின்றனர்.
அதிமுகவினர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் வழக்கறிஞர் மூலம் வேட்பு மனுக்களை எந்தவிதமான சிக்கலும் இன்றி தயாரிக்கப்பட்டு உடனடியாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே பிரச்சாரத்தையும் தொடங்க வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டனர். தங்களுக்கு சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சில முகங்கள் அதிரடியாக இறங்கி பணியாற்றி வருகின்றனர் என்கின்றனர் அதிமுகவினர். 2026 சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்வா? சாவா? என்ற சூழலில் இருக்கும் நிலையில் முன்னதாகவே தேர்தல் வேலைகளை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமியின் வேலைகளுக்கு பலனளிக்குமா? மீண்டும் அவர் ஆட்சியில் அமர்வாரா? என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
-
சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம் -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
திருவிக நகரில் திடுக்கிடும் மாற்றம்! பொற்கொடி வாக்கு சேகரித்த போது தவெக பெண் செய்த செயலால் பரபரப்பு -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே!











Click it and Unblock the Notifications