அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்கியதும்.. திண்டுக்கல் சீனிவாசனை நியமித்ததும் செல்லும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனமும் செல்லும்.

அதிமுக பொதுக் குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்டது. அன்றைய தினம் பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்களால் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஒற்றைத் தலைமைக்கு எதிராக இருக்கும் ஓபிஎஸ்ஸை அவர் வகித்து வரும் பொருளாளர் பதவி உள்பட அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகவும் எடப்பாடி அறிவித்தார். இதையடுத்து பொருளாளராக தென் மாவட்டங்களின் பிரதிநிதியாக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

வரவு செலவு கணக்குகள்

வரவு செலவு கணக்குகள்

இதையடுத்து அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை பொருளாளர் என்ற அடிப்படையில் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்திருந்தார். மேலும் தேவர் ஜெயந்திக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் செய்யப்பட்ட தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. இந்த கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின் போது தங்க கவசம் தேவருக்கு அணிவிக்கப்பட வேண்டும்.

தங்க கவசம்

தங்க கவசம்

இதற்காக அந்த கவசம் மதுரை டிவிஎஸ் காலனியில் உள்ள வங்கி லாக்கரில் இருக்கும். அதை அதிமுக பொருளாளர் பெற்று கோயில் நிர்வாகத்திடம் கொடுப்பார். விழா முடிவடைந்தவுடன் கோயில் நிர்வாகம் தங்க கவசத்தை அதிமுக பொருளாளரிடம் ஒப்படைக்கும். அவர் வங்கி லாக்கரில் ஒப்படைப்பார். இது மட்டுமல்லாமல் தேர்வு வரவு செலவு கணக்குகளையும் பொருளாளர்தான் பார்ப்பார்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

இவற்றை எல்லாம் ஓபிஎஸ் கவனித்து வந்த நிலையில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டவுடன் கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசனும் ஓபிஎஸ்ஸும் வங்கிக்கு தனித்தனியே கடிதங்களை எழுதியிருந்தனர். எனவே யாரிடம் கொடுப்பது என்ற குழப்பத்தை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் அந்த பொறுப்பை ஏற்று தேவர் ஜெயந்தி விழாவும் சிறப்பாக நடந்தது.

அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள்

அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள்

இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வெளியானது. அதில் அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும் என நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளித்துவிட்டு ஓபிஎஸ் தரப்பின் மனுவை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும். இவர் நீக்கப்பட்டது செல்லும் என்றால் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனமும் செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+