Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 தொகுதிக்கு ஒப்புக்கொண்ட டிடிவி தினகரன்? என்டிஏ பேனரில் இடம்பெற்ற கட்சிகள்.. விரைவில் அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு 8 முதல் 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட சூழலில், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பாமக இணைந்துவிட்ட சூழலில், தேமுதிக இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் என்டிஏ கூட்டணியை உறுதி செய்திருக்கின்றன.

AIADMK TTV Dhinakaran Alliance

இருந்தாலும் டிடிவி தினகரனின் அமமுக இந்த கூட்டணியில் இணையுமா என்று விவாதம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா இடையிலான சந்திப்பு முடிவடைந்த அடுத்த நாளிலேயே, டிடிவி தினகரன் டெல்லியில் முகாமிட்டிருந்தார். பின்னர் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின், அவர் என்டிஏ கூட்டணியில் இணைய ஒப்புக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது.

அதேபோல் அமமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கப்பட்ட சூழலில், அமித்ஷா தரப்பில் 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறியதாக விவரம் அறிந்தவர்கள் சொல்லுகின்றனர். இந்த நிலையில் ஜனவரி 23ஆம் தேதி என்டிஏ கூட்டணி தரப்பில் சென்னையில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மதுராந்தகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டுக்கான வரவேற்பு பதாகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று என்டிஏ கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

அதிமுக கூட்டணியில் மொத்தமாக 56 தொகுதிகள் பாஜகவுக்கு கேட்டிருக்கின்றனர். அந்த 56 தொகுதிகளில் அமமுக, புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன், தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொள்கிறோம் என்று அமித்ஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமமுகவுக்கு 8 அல்லது 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+