விஜய் உடன் கூட்டணிக்கு தயாராகும் அதிமுக? எக்ஸிட் போல் முடிவால் ரூட்டை மாற்றும் எடப்பாடி! புது தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான சீட்டுகளை பெற வாய்ப்புள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக 'ஆக்சிஸ் மை இந்தியா' கருத்து கணிப்பின்படி தவெக 98 முதல் 120 தொகுதிகள் வரை வெல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதிமுக, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் 'எக்ஸிட் போல்' எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 4 கருத்து கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்தன. 3 கருத்து கணிப்புகள் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக வந்தன.

அதேவேளையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 'ஆக்சிஸ் மை இந்தியா' (Axis My India) கருத்து கணிப்புகள் அமைந்து இருந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக அறிமுகம் ஆன நிலையில் அந்த கட்சி திமுக, அதிமுகவை முந்தி அதிக இடங்களை கைப்பற்றும் எனவும், தனித்து கூட ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
திமுகவை விட தவெகவிற்கு அதிக சீட்
இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி திமுக 35 சதவீதம் வாக்குகளுடன் மொத்தம் 92 முதல் 110 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீதம் வாக்குகளை பெற்றாலும் கூட 98 முதல் 120 தொகுதிகள் வரை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 23 சதவீத வாக்குகளுடன் 2-32 தொகுதிகளை கைப்பற்றலாம். நாம் தமிழர் கட்சி 3 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 4 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தவெக உடன் அதிமுக கூட்டணி?
இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தொடர்ந்து அதிமுக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பற்றி பேச ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் அந்த கருத்து கணிப்பில் முதல்வர் வேட்பாளராக விஜய்க்கு 37 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமியை விட அதிகமாகும். இதனால் அதிமுக, விஜய்யின் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது.
கருத்து கணிப்புகளின் விவரங்கள்
மேலும் பீபிள் பல்ஸ் நிறுவன கருத்து கணிப்பின்படி திமுக 125-145 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 65 - 80 தொகுதிகளிலும், தவெக 6 தொகுதிகளிம் வெல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேட்ரிஸ் கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி 122 - 132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 80 முதல் 100 தொகுதிகளிலும், தவெக 0 - 6 தொகுதிகளிலும் வெல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி-மார்க் கருத்து கணிப்பின்படி திமு கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளிம், அதிமுக கூட்டணி 60 - 70 தொகுதிகளிலும், தவெக 1-6 தொகுதிகளிலும் வாகை சூடலாம் என்று கூறப்பட்டுள்ளது. பீபிள் இன்சைட் கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி 120 - 140 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 60-70 தொகுதிகளிலும், விஜய்யின் தவெக 30-40 தொகுதிகளிலும் வெல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஜேவிசி -இந்தியா டூடே கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 75 -95 தொகுதிகளிலும் , அதிமுக 128-147 தொகுதிகளிலும், தவெக 8-15 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. சிஎன்என் -நியூஸ் 18 கருத்து கணிப்பில் திமுக 103 டூ 113 இடங்களிலம், அதிமுக கூட்டணி 114 டூ 124 தொகுதிகளிலம், தவெக 4-10 இடங்களிலும், மற்றவர்கள் 2- 6 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்பைக் மீடியாவில் திமுக கூட்டணி 89-101 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 124 -127 தொகுதிகளிலும், தவெக 4-6 இடங்களிலும் வெல்லும் என்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக 3 கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளன.
அதிமுக போடும் பிளான் என்ன?
பெரும்பான்மையான எக்ஸிட் கருத்து கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. இருப்பினும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எவ்வளவு வெற்றி பெறும் என்பது தெரியவில்லை. அதேபோல் இந்த கருத்து கணிப்புகள் அப்படியே பலிக்குமா? இல்லையா? என்பதும் கேள்விக்குறி தான். இந்த கணிப்பின்படி அல்லது கணிப்பை தாண்டி திமுக கூட்டணி வென்றால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக கணிப்பை விட திமுக வெல்லும் இடங்கள் சரியும்பட்சத்தில் அதிமுக மற்றும் தவெக இரண்டும் சேர்ந்து மெஜாரிட்டிக்கான 118 தொகுதிகளை எட்டினால் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் அதிமுக - தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.













Click it and Unblock the Notifications