எடப்பாடி பிரச்சாரத்தில்.. அதிமுக, பாஜக கொடிகளுடன் பறந்த தவெக கொடி.. கூட்டணி கணக்கு மாறுகிறதா?

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடி பறந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வெளிப்படையாகவே தவெகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், விஜய்யை விமர்சிப்பதையும் அவர் தவிர்த்து வருகிறார். இதனால் இரு கட்சிகளும் விரைவில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தவெக நிர்வாகிகள் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்கவில்லை. மற்றக் கட்சிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, அடுத்தக் கட்ட அரசியலை மேற்கொள்ள தொடங்கிவிட்டன.

AIADMK - TVK Alliance

முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல் அரசுப் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தர்மபுரியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக கண்ட 200 தொகுதிகள் வெற்றி என்ற கனவை தகர்த்து, அடுத்தாண்டு அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என்பதற்கான சாட்சி இந்த மக்கள் கூட்டம். 2021 தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட 525 அறிவிப்புகளில், 10 சதவிகிதத்தை கூட திமுக நிறைவேற்றவில்லை.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள் அரூர் குமரன் அணை திட்டம் நிறைவேற்றப்படும். அரூரில் 93 ஏரிகளுக்கு தென்பெண்ணையாற்று உபரி நீரை சென்னைக்கால் திட்டம் மூலம் பெற்று தருவதற்கான கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள் மட்டுமல்லாமல் தவெகவின் கொடிகளும் பறந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இளைஞர்கள் சிலர் தவெக கொடியை வேகமாக அசைத்து கொண்டிருந்தனர். இதன் காட்சிகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி இருக்கிறது.

ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பேசி வருகின்றனர். அதிமுக தரப்பில் வெளிப்படையாகவே விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த சூழலில் அதிமுக கூட்டத்தில் தவெக கொடி காணப்பட்டதும், அதனை அதிமுகவினர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+