தமிழக மக்கள் பாஜகவை வெறுக்கிறாங்க! அதிமுகவிற்கு வாக்களித்தால் வளர்ச்சி தடைபடும்! அரவிந்த் கெஜ்ரிவால்
சென்னை: அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கி உள்ளது என்றும், திமுக ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர் என்று டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், நாட்டிலேயே மிக மோசமான ஊழல் கட்சி பாஜக தான்.. பாஜக ஆட்சியில் முன்னேறிய ஒரு மாநிலத்தை சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோடை வெயிலை விட அரசியல் தலைவர்களின் பிரசாரம் அனல் பறக்கிறது.

ஆளும் திமுகவும் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தை காலையில் இருந்தே தொடங்கியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் காலையிலேயே சோழிங்கநல்லூர் தொகுதியில் பிரசாரத்தை ஆரம்பித்தார். இதேபோல் திமுக வேட்பாளர்கள் பலரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடுமையாக இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் திமுக ஆட்சிகள் மக்கள் சிறப்பாக உள்ளதாகவும், திமுகவே இந்த முறை அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக எம்பி டிஆர் பாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- திமுக அரசு கல்விக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே அதிக தொழில் முதலீட்டை தமிழ்நாடுதான் ஈர்த்துள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் மிக திருப்தியாக உள்ளனர். திமுகவின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாபில் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம். கடந்த முறையை விட இந்த முறை திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். நாட்டிலேயே மிக மோசமான ஊழல் கட்சி பாஜக தான்.

தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை வெறுக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் பிளவுவாத அரசியலை வெறுக்கிறார்கள். அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைபடும். அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கி உள்ளது. பாஜகவில் இருந்து ஒருவர் வெற்றி பெற்றாலும், அதாவது ஒரு எம்.எல்.ஏ வெற்றி பெற்றாலும் பாஜகவை சேர்ந்தவர் தான் முதல்வராக ஆட்சி அமைப்பார்.
பாஜக ஆட்சியில் முன்னேறிய ஒரு மாநிலத்தை சொல்ல முடியுமா? 30 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள குஜராத் மாநிலத்திலேயே இன்னும் சாலைகள் படு மோசமாக குண்டும் குழியுமாக உள்ளன.












Click it and Unblock the Notifications