தேர்தல் நெருங்க நெருங்க.. களமே மாறுது.. திமுக vs அதிமுகதான்.. அவுட்டான தவெக.. விஜய்க்கு போன வார்னிங்
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 வாரங்களே உள்ள நிலையில், திராவிட அரசியலுக்கு சவாலாகத் தெரிந்த "விஜய் அலை" தற்போது ஓய்ந்து வருவதாகத் தெரிகிறது. கடந்த நான்கு வாரங்களாக தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வேகம் கணிசமாகக் குறைந்துள்ளதை சமீபத்திய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
தொடர் சட்டப் போராட்டங்கள் மற்றும் சினிமா சிக்கல்களால் விஜய் திணறி வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க.. விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறைய தொடங்கி உள்ளன. கடந்த 1 மாதத்திற்கு முன் ஈரோடு கூட்டத்திற்கு விஜய் சென்று இருந்தார்.. அதன்பின் கட்சி சார்பாக கிறிஸ்துமஸ் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதையடுத்து கடந்த 1 மாதங்களாக அவர் அரசியல் நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிவிட்டார். ஜனநாயகன் ஆடியோ லான்ச்சில் கலந்து கொண்டாலும் அது அரசியல் நிகழ்வு கிடையாது. அரசியல் ரீதியாக விஜய் கிட்டத்தட்ட முடங்கியே விட்டார். கிட்டத்தட்ட கடந்த 4 வாரங்களாக தவெக கட்சி அமைதியாக இருக்கிறது.
சிபிஐ சட்டச் சிக்கல்களும் "கரூர் விவகாரமும்"
விஜய்யின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ (CBI) விசாரணை. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 2 முறை விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்புப் பணிகள் முடங்கியுள்ள நிலையில், விஜய் தனது நேரத்தை டெல்லியிலும், சட்ட வல்லுநர்களுடனுமே செலவிட வேண்டியுள்ளது.
இதற்கிடையில், விஜய்யின் மிக முக்கியமான படமாக எதிர்பார்க்கப்பட்ட 'ஜனநாயகன்' வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கட்சிக்கு மற்றுமொரு பின்னடைவைத் தந்துள்ளன. தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டிய இந்தப் படம், தணிக்கை மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ளதால், படம் வழியாக இளைஞர்களைத் திரட்டும் விஜய்யின் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
கருத்துக்கணிப்பு அதிர்வுகள்: மீண்டும் இருமுனைப் போட்டி?
இந்தச் சமீபத்திய நிகழ்வுகள் கள நிலவரத்தை மாற்றியுள்ளன. டிசம்பர் மாதம் வரை, நகர்ப்புறங்களிலும் முதல்முறை வாக்காளர்களிடமும் திமுக-விற்கு இணையாகவோ அல்லது முன்னிலையிலோ இருந்த விஜய், இப்போது பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
திமுக+ பலம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, தனது நலத்திட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவுடன் இழந்த இடங்களை மீண்டும் பிடித்துள்ளது. விஜய்க்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துவர்கள் வாக்குகள் கூட திமுக பக்கம் திரும்பி வர தொடங்கி உள்ளது.
அதிமுக+ எழுச்சி: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சிதறிய அணிகளை ஒன்றிணைத்து தற்போது வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. அமமுக வருகை அந்த கூட்டணிக்கு பெரிய பலமாக மாறி உள்ளது.
ஈபிஎஸ் (EPS) vs முகஸ்டாலின் (MKS): ரியல் போட்டி களம்
அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவலின்படி, தமிழக அரசியல் மீண்டும் களம் திமுக - அதிமுக என்றே மாறி உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு வரை இது மும்முனைப் போட்டியாக இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் பழைய திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான போராகவே மாறிக் கொண்டிருக்கிறது.. விஜய் என்னதான் போட்டி தவெக vs திமுக என்று சொன்னாலும் களம் என்னவோ அதிமுக vs திமுக என்றே உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
விஜய் இந்தச் சவால்களில் இருந்து மீண்டு வராவிட்டால், 2026 தேர்தல் களம் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையிலான நேரடி யுத்தமாக மாறும். இதில் தமிழக வெற்றி கழகம் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இல்லாமல், வெறும் வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக மட்டுமே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
-
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications