அதிமுகவின் மெகா கூட்டணி.. எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது.. லிஸ்ட் வெளியானது!

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை சென்னையில் அறிவிக்கப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது ?

    சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏப்ரல் 11 தேதி லோக்சபா தேர்தல் பல்வேறு மாநிலங்களில் தொடங்க உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் எங்கு போட்டியிடும், அதிமுக எங்கு போட்டியிடும் என்பது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    பெரிய கூட்டணி

    பெரிய கூட்டணி

    தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. லோக்சபா தேர்தலை அடுத்த முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி கட்சி, என்.ஆர் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    அதிமுக கூட்டணியில் பாமக 7 இடங்கள், பாஜக 5 இடங்கள், தேமுதிக 4 இடங்கள், புதிய தமிழகம் 1 இடம், புதிய நீதிக்கட்சி கட்சி 1 இடம், என்.ஆர் காங்கிரஸ் 1 இடம், தமிழ் மாநில காங்கிரஸ் 1 இடம், 20 இடங்களில் அதிமுக போட்டியிட உள்ளது.

    ஒப்பந்தம்

    ஒப்பந்தம்

    இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடார்பாக கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடந்தது. எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்று அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியது. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை சென்னையில் கிரவுன் பிளாசா ஹோட்டலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக போட்டி

    அதிமுக போட்டி

    அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்:

    சேலம்
    நாமக்கல்
    கிருஷ்ணகிரிஈரோடு
    கரூர்
    திருப்பூர்
    பொள்ளாச்சி
    ஆரணி
    திருவண்ணாமலை
    சிதம்பரம் (தனி)
    பெரம்பலூர்
    தேனி
    மதுரை
    நீலகிரி (தனி)
    திருநெல்வேலி
    நாகப்பட்டனம் (தனி)
    மயிலாடுதுரை
    திருவள்ளூர் (தனி)
    காஞ்சிபுரம் (தனி)
    தென் சென்னை

    பாமக தொகுதிகள்

    பாமக தொகுதிகள்

    பாமக போட்டியிடும் 7 தொகுதிகள்:

    தர்மபுரி
    விழுப்புரம் (தனி)
    அரக்கோணம்
    கடலூர்
    மத்திய சென்னை
    திண்டுக்கல்
    ஸ்ரீபெரும்புதூர்

    பாஜக போட்டி

    பாஜக போட்டி

    பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள்:

    கன்னியாகுரி
    சிவகங்கை
    கோவை
    ராநாதபுரம்
    தூத்துக்குடி

    தேமுதிக தொகுதிகள்

    தேமுதிக தொகுதிகள்

    தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகள்

    கள்ளக்குறிச்சி
    திருச்சி
    வட சென்னை
    விருதுநகர்

    மற்ற கட்சிகள்

    மற்ற கட்சிகள்

    மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

    தமாகா - தஞ்சாவூர்

    புதிய தமிழகம் -தென்காசி தனி

    புதிய நீதிக் கட்சி - வேலூர்

    எனஆர் காங்கிரஸ் -புதுச்சேரி

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+