எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் மாஸ் காட்டும் எடப்பாடி.. ஆகஸ்ட் 20 இல் மதுரையில் அதிமுக மாநாடு
சென்னை: முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஏப்ரல் 7ஆம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இன்றைய சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை செயற்குழு அங்கீகரித்தது.
மேலும் அதிமுகவில் கொள்கை ரீதியில் முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரத்தை செயற்குழு கூட்டம் அளித்துள்ளது. இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1: அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
தீர்மானம் 2: அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்துவது
தீர்மானம் 3: அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பிக்கும் பணியிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்துடும் பணியிலும் கழக நிர்வாகிகளும் கழக உன்பிறப்புகளும் முனைப்போடு ஈடுபட சூளூரை
தீர்மானம் 4: நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலையொட்டி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகளை விரைந்து அமைத்தல்!
தீர்மானம் 5: திமுக ஆட்சியின் அராஜகங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் ஐடி விங் நிர்வாகிகள் உள்ளி்ட கழக நிர்வாகிகள் மீது விடியா அரசால் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருவதற்குக் கடும் கண்டனம்!
தீர்மானம் 6: அதிமுக சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரத பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்களை நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கும் மக்கள் விரோத திமுக அரசுக்கு கடும் கண்டனம்
தீர்மானம் 7: திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் சட்டசபை பொதுத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தல்!
தீர்மானம் 8: திமுக அரசு பதவியேறற நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை முதலான சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
தீர்மானம் 9: தமிழ்நாட்டின் கடன் சுமையைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்து, கடன் அளவை குறைக்காமல், மேலும் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை அதிகப்படுத்தி உள்ள திமுக அரசுக்குக் கடும் கண்டனம்!
தீர்மானம் 10: விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது திணித்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம்
தீர்மானம் 11: திமுகவுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு கழகத்திற்கு துரோகம் இழைத்து வருபவர்களுக்கு கழக பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒன்றிணைந்து தக்க பாடம் புகட்டிட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சூளூரை!
தீர்மானம் 12: ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியின் போது மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவேரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட மத்திய அரசுக்கு அழுத்தம் தர திமுக அரசை வலியுறுத்தல்!
தீர்மானம் 13: சட்டசபை மரபுகளை, ஜனநாயக மாண்புகளை சீரழிக்கும் திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள்!
தீர்மானம் 14: இளம் தலைமுறையினரை சீரழிக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் பெருகி வரும் போதை கலாச்சாரத்தை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
தீர்மானம் 15: வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் அதற்கு அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் கழக பொதுச் செயலாளர் தலைமையில் தீவிர களப்பணியாற்றி கழகத்தின் வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறந்திட வீரசபதம் ஏற்போம்!
இவ்வாறு 15 தீர்மானங்களை செயற்குழு கூட்டம் நிறைவேற்றியது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மாநாடு நடத்துவது என்பது திருப்புமுனையை ஏற்படுத்தும். திமுக என்றால் திருச்சி மாநாடு, அதிமுக என்றால் மதுரை மாநாடு, எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் மதுரையில் நடத்தப்பட்ட பல மாநாடுகள் அவர்களுக்கு தேர்தல் வெற்றி வாய்ப்பை வழங்கியுள்ளன.
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தை கூட மதுரையில்தான் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மதுரை மாநாடு மாஸ் காட்டும் மாநாடு என அழைக்கப்படுகிறது. எனவே எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மதுரையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
இப்போ வந்த தேமுதிகவுக்கு அதிக சீட்டா.. எங்களுக்கு இப்படி சொல்ல கூடாது.. திமுக கூட்டணிக்குள் சர்ச்சை! -
காங்கிரஸ், தேமுதிகவுக்கு திமுக வாரி வழங்கியாச்சு! எங்களுக்கு ஒரு நியாயம்? சீறிய CPIM சண்முகம் -
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications