சசிகலா பலம் என்னன்னு தெரியும்.. பாஜக சிடி ரவி தந்த திடீர் கிரீன் சிக்னல்.. அதிமுகவிற்கு ஃப்ரீ ஹேண்ட்
சென்னை: அதிமுகவுடன் அமமுக கூட்டணி வைக்குமா? அப்படி கூட்டணி வைத்தால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? என்று பல விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் நடந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி அளித்த பேட்டி இந்த விவாதத்தை பெரிதாக்கி இருக்கிறது.
2021 சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக - அமமுக இடையே என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்குமா? ஒன்று சேருமா? இல்லை தனியாக தேர்தலை சந்திக்குமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சசிகலா தொடர்ந்து சைலன்ட் மோடில் இருப்பது ஏன்? புயலுக்கு முன்பான அமைதியா இது? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும் கூட அமமுகவுடன் இணையும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை என்கிறார்கள். இன்று பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி ஒவ்வொரு நாளும் அதிமுக தலைவர்கள் அமமுகவை தாக்கி பேசி வருகிறார்கள். அமமுக தயவு இல்லாமல் வெற்றிபெற்றுவிட முடியும் என்று அதிமுக தலைவர்கள் நினைக்கிறார்கள்.

தயவு
அதிமுக தனிப்பெரும் கட்சி. அமமுக தயவு எல்லாம் தேவை இல்லை. சட்டசபை இடைத்தேர்தலில் வென்றது போல திமுகவிற்கு எதிராக அதிமுக தனியாக வெல்லும். அமமுக உதவி எங்களுக்கு தேவை இல்லை என்று அதிமுக கருதுகிறது. அதிலும் முதல்வர் பழனிசாமிக்கு இப்போது ஆதரவு பெருகி இருப்பதால் அதிமுக கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கிறது.

பாஜக
ஆனால் பாஜக இந்த கருத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது என்கிறார்கள். அமமுக வந்தால் நமக்குத்தான் நல்லது. அதிமுக வாக்கு பிரியாது. திமுகவிற்கு இடமே கொடுக்க கூடாது, லோக்சபா தேர்தல் போல நடந்துவிட கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதனால் அமமுக வந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில்தான் பாஜக இருக்கிறது.

சசிகலா
சசிகலா வந்து பேசினால், கூட்டு சேர்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்ற நிலையில் பாஜக இருக்கிறது. ஆனால் அதிமுகவை கட்டாயப்படுத்தும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை என்றும் கூறுகிறார்கள். அதிமுக வேண்டாம் என்று கூறினால், எங்களுக்கும் சசிகலா வேண்டாம் என்ற முடிவில்தான் பாஜக இருக்கிறதாம்.

நல்லது
ரெண்டு கட்சியும் சேர்ந்து போட்டியிட்டால் ஓகே.. இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை என்ற மோடில் பாஜக இருக்கிறது. கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் அதிமுகவிற்கு பாஜக ஃப்ரீ ஹேண்ட் கொடுத்துவிட்டது என்று கூறுகிறினார்கள். இன்று பேட்டி அளித்த தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவியும் இதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.

கூட்டணி
தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி இன்று சென்னையில் அளித்த பேட்டியில் அதிமுக அமமுக கூட்டணி தொடர்பாக அதிமுகவே முடிவெடுக்கும். அதிமுகதான் எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி. இதனால் அவர்கள்தான் அமமுக கூட்டணி குறித்து முடிவு எடுப்பார்கள். சசிகலா, தினகரனின் பலம், பலவீனத்தை அதிமுக அறியும், என்று சிரித்தபடி கூறினார்.

வேண்டாம்
அமமுக வேண்டாம் என்றோ, வேண்டும் என்றோ சிடி ரவி எங்கும் கூறவில்லை. சிரித்தபடியே சிடி ரவி இந்த கேள்விக்கு பதில் அளித்தார். வெளிப்படையாக அதிமுக முடிவு எடுக்கட்டும் என்று விட்டுவிட்டார். இதன் மூலம் அமமுக வருவதில் பாஜகவிற்கு எந்த சிக்கலும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அதிமுக இன்னும் அமமுகவை சேர்த்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள்.

சசிகலா
அமமுகவை மையமாக வைத்து இப்படி பல விவாதங்கள் நடக்கும் போது பேச வேண்டிய சசிகலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். எதற்காக சசிகலா பொறுமை காக்கிறார் என்று அமமுகவினருக்கே தெரியாத நிலைதான் உள்ளது. சசிகலா ஏதாவது பேசுவாரா.. இல்லை தேர்தல் வரை இப்படியே அமைதியாக இருந்து விடுவாரா என்று அமமுகவினர் பலர் சந்தேகத்தில் உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications