யாருடன் கூட்டணி? யாருக்கு எத்தனை சீட்? அதிமுகவே முடிவு செய்யும்.. உறுதியாக சொன்ன ஓ.எஸ்.மணியன்!
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை அதிமுகதான் எடுக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் யாருடன் கூட்டணி? யாருக்கு எத்தனை சீர் வழங்க வேண்டும் என்பதையும் அதிமுக தான் தீர்மானிக்கும் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.

அண்ணாமலை பேச்சு
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் இருப்பேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.

பதவியை ராஜினாமா செய்வேன்
தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு முதல் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், அண்மைக் காலமாக இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றே அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.எஸ்.மணியன் பேட்டி
இந்த நிலையில் அண்ணாமலையின் கருத்து தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை அதிமுகதான் எடுக்கும். யாருடன் கூட்டணி? யாருக்கு எத்தனை சீர் வழங்க வேண்டும் என்பதையும் அதிமுக தான் தீர்மானிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டணி உடைகிறதா?
கடந்த வாரத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே அதிமுகவின் விருப்பம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications