Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

த்தூனு காரி துப்ப மாட்டீங்களா? டிடிவி, ஓபிஎஸ், சசி ஜெயிலுக்கு போவாங்க.. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம். அவரது மகன்கள் உட்பட அனைவரும் இந்த கூட்டணிக்கு வராவிட்டால் சிறைக்கு செல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லையென்றும், கே.ஏ.செங்கோட்டையன் சென்றுவிட்டால் அ.தி.மு.க.வை அழித்துவிட முடியாது என அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 54-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்," அ.தி.மு.க. தனியாக தேர்தலை சந்திக்கும் என்று தி.மு.க. நினைத்தது. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் அவதூறுகளை பரப்புகின்றனர். தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் சேரும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
கேஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது கவிழ்ப்பதற்கு டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முயன்றனர். ஆனால் நடக்கவில்லை.

Dindigul Srinivasan Sasikala AIADMK

அதிமுக உட்கட்சி மோதல்

இருவரும் தனித்தனியாக தேர்தலில் நின்று தோற்றுவிட்டனர். எத்தனையோ வழக்குகளை போட்டும் எதுவும் நடைபெறவில்லை. தற்போது தி.மு.க. வெற்றிபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் வெளியே சென்றுவிட்டதால் அ.தி.மு.க. அழிந்து விட்டது என பேசுகின்றனர். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. அ.தி.மு.க. கொடுத்த அடையாளம், பெயரை விட்டுவிட்டு சென்றால் மரியாதை இருக்காது. அ.தி.மு.க.வால் வளர்ந்த செங்கோட்டையன், மோசமான நிலையில் சென்றுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு மரியாதை செலுத்தும் இடத்தில் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நடுவே சிக்கி செங்கோட்டையன் இடிபடுகிறார். முதல் நாளிலேயே அவருக்கு அந்த கதி. இனிமேல் என்ன ஆவாரோ? யாருக்கும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மரியாதை. ஓ.பன்னீர்செல்வம் எத்தனையோ நாடகம் போட்டார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக ஆனதும் சசிகலா உதவியாளர் ஆனார். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் வீட்டுக்குள் வந்தனர்.

டிடிவி தினகரன்

எல்லாரும் சேர்ந்து கொள்ளையடித்து வைத்துள்ளனர். அதை மத்திய அரசு கண்டுபிடித்து வைத்துள்ளது. எனவே சிறைக்கு செல்லும் வெகுதூரத்தில் இல்லை. சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன்கள் மீது வழக்கு உள்ளது. இவர்கள் யாரை ஒன்று சேர்க்க போகிறார்கள். ஏ.செங்கோட்டையன் சென்றுவிட்டால் அ.தி.மு.க.வை அழித்துவிட முடியாது. தொண்டர்கள் கூட அவரை சந்திக்க செல்வதில்லை. டி.டி.வி. தினகரனோடு சேர்ந்து, கே.ஏ.செங்கோட்டையன் ஏமாந்து விட்டார். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்த அனைவரும் சரண் அடைந்துவிட்டனர்.

செங்கோட்டையன் சர்ச்சை

டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்க வேண்டியது தானே. எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் பெயரை வைத்து ஊரை ஏமாற்றுகின்றனர். இந்த 4 பேருடன் யாராவது ஒன்றிரண்டு பேர் இருந்தால் மீண்டும் கட்சிக்கு வந்து விடுங்கள். அ.தி.மு.க.வை விட்டு சென்றவர்களை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்றுதான் கூறுவார்கள். டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய 3 பேரும் சேர்ந்துவிட்டார்கள். இந்தியாவையே அழித்துவிடுவார்கள் என்று செய்தி வெளியிடுவார்கள். ஒன்னுமே கிடையாது.

எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய நான் இருக்கேன். இந்த கட்சியில் 54 ஆண்டுகளாக இருக்கிறேன். தம்பி எங்களுக்கு பேரு புகழ் இதெல்லாம் கட்சியினால் வந்தது. திடீர்னு வேற எதுனாலும் எடுத்துகிட்டு போனால் தூ என்று காரித்துப்ப மாட்டீர்களா? இவனெல்லாம் ஒரு மனுசனா என்று இரட்டை இலைக்கு வாக்கை வாங்கிவிட்டு இப்படி பேசுறானே என்று சொல்லுவீங்களா? மாட்டீங்களா? அதே மாதிரி தான் கட்சியினால் வளர்ந்து கட்சித்தொண்டர்களால் வளர்ந்து, கட்சித் தொண்டர்கள் ரத்தம் சிந்திய, அத்தனை தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சிய செங்கோட்டையன் அவர்கள் கேவலமான ஒரு சூழ்நிலைக்குப் போயிருக்கிறார்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+