திமுக எடுத்த அம்பை பிடுங்கி.. திமுக மீதே எறிந்த அதிமுக.. 3 எம்எல்ஏக்களை வளைத்த சாணக்கியத்தனம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக-வுக்கு பதிலடி.. அவர்களை வளைத்துப்போட்ட அதிமுக- வீடியோ

    சென்னை: சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற அம்பை திமுக கையில் எடுத்தால், அதே அம்பினை திருப்பி போட்டு திமுகவுக்கு நோஸ்கட் செய்துள்ளது அதிமுக!

    கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் சென்ற வருடம் முழுவதும் அதிமுகவுக்கு பெரிய குடைச்சலாக இருந்தார்கள்.

    யாருக்கு ஆதரவு தர போகிறார்களோ என்ற அச்சத்தையும் இவர்கள் 3 பேரும் தந்து கொண்டே இருந்தனர். இதுதான் திமுக, அதிமுக, ஏன் அமமுகவைகூட குழப்பி அடித்தது.

    பாயும் புலி

    பாயும் புலி

    விரைவில் ஆட்சி கவிழும், அதுவும் இந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள்ளேயே கவிழும் என்றும், அதிமுக எம்எல்ஏக்களை திமுக வளைக்க முயற்சி என்றெல்லாம் பேச்சுகளும், சலசலப்புகளும் எழுந்தன. இதனால் ஸ்டாலின் என்னவோ பெரிசாக செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. அதற்கேற்றார்போல, புலி பதுங்குவது பாயத்தான் என்றும் வெயிட் அண்ட் சீ என்று சொல்லவும் அதிமுக தரப்பு லேசான ஆட்டம் கண்டது.

    அதிருப்தி

    அதிருப்தி

    அதனால் தங்க தமிழ்ச்செல்வனை ஸ்கெட்ச் போட்டு தூக்கின மாதிரி வேறு ஏதாவது பெரிசாக நடக்க போகிறதோ என்ற கிலியும் ஏற்பட்டது. அதனால் முதல் காரியமாக, இப்படியா, அப்படியா என்று தெரியாமல் பொத்தாம் பொது நடுநிலைமையாக இருப்பதாக கருதப்பட்ட 3 அதிருப்தி எம்எல்ஏக்களை தன்வசம் இழுத்து பிடித்து வைத்துள்ளது.

    பஞ்ச் பேச்சு

    பஞ்ச் பேச்சு

    இவர்கள் 3 பேரும் அதிமுகவுக்குதான் தங்கள் ஆதரவு என்று சொன்னபோதிலும், என்னமோஆளும் தரப்புக்கு ஒரு சந்தேகம் இவர்கள் மீது இருந்து கொண்டே இருந்தது. அதனால்தான் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்குகூட அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இப்போது ஸ்டாலினின் பஞ்ச் பேச்சுதான் இவர்களை அழைத்து பேச காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

    இறுதி முடிவு

    இறுதி முடிவு

    "அந்த பக்கம் உதவி செய்துட மாட்டீங்களே, கடைசிவரை அதிமுகவுக்கு ஆதரவு?" என்று அவர்களிடம் பேசியதாக தெரிகிறது. அதன்பிறகே 3 பேரையும் இணைத்துக் கொள்ள முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 3 அதிருப்தி எம்எல்ஏக்கள், விஷயத்தில் திமுக முயற்சி எடுத்திருப்பினும் அது இப்போது வீணாகி விட்டதாக உள்ளது.

    ஆட்சி கவிழ்ப்பு

    ஆட்சி கவிழ்ப்பு

    அடுத்ததாக என்ன முயற்சியை திமுக கையில் வைத்துள்ளது அல்லது இப்போதும் ஆட்சி கவிழ்ப்பு நடந்தே தீரும் என்று ஸ்டாலின் சொல்கிறாரா? அப்படி சொன்னால், அது எந்த அடிப்படையில் சொல்கிறார் என்றெல்லாம் இனிமேல்தான் தெரிய வரும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+