சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"துண்டு" போட்டாச்சு.. கூடாரமே காலியாகுது.. நாளை திமுகவில் இணையும் "புள்ளி".. அரண்டு கிடக்கும் அதிமுக

கோவை செந்தில் கார்த்திகேயன் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: இன்னொரு அதிமுக புள்ளியும், திமுக பக்கம் தாவ உள்ளதாக கூறப்படுகிறது.. நாளைய தினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன... யார் அவர்?
அதிமுகவில் ஒற்றை தலைமை தலைவிரித்தாடுகிறது.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்காமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.

ஏற்கனவே அதிமுக 2 ஆக பிரிந்துள்ள நிலையில், இப்போது 4 ஆக சிதறி கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன், சசிகலா தலைமையில் ஒரு அணியும் இருந்து வருகிறது...

"அடிமடியிலேயே".. லட்டு மாதிரி "டாக்டரை" தூக்கிருச்சே திமுக.. காரணம் யார் தெரியுமா.. விழிக்கும் பாஜக

மெஜாரிட்டி

மெஜாரிட்டி

இவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சியில் பாஜக மேலிடம் மறைமுகமாக முயன்று வருகிறது.. தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக பாஜக இவ்வாறு செய்ய முயற்சித்தாலும், அதற்கு எடப்பாடி பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார். இதனால், தொண்டர்களும், நிர்வாகிகளும் பல்வேறு கட்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்... இப்படி பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவை விட்டு வெளியேறி வருவது குறித்து, எடப்பாடி பழனிசாமிக்கோ, ஓபிஎஸ்ஸுக்கோ கவலையே இல்லை என்று தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

 ஆறுக்குட்டி

ஆறுக்குட்டி

அதிமுக உள்கட்சி பூசலால் பெருத்த லாபம் ஆளும் கட்சியான திமுகவுக்கே கிடைத்து வருகிறது.. சமீபத்தில் அதிமுக மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டனர். 2 நாட்களுக்கு முன்பு, முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. இன்றைய தினம், பாஜக மாநில கூட்டுறவு அணி மாநில செயலாளர் டாக்டர் கணேசன், பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.. இன்றைய தினம், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்..

 செந்தில் கார்த்திகேயன்

செந்தில் கார்த்திகேயன்

இப்போது இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அதிமுக எம்ஜிஆர் இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. நாளை காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. தொழில் நெருக்கடி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தலின்பேரில், செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகேயனின் மனைவி கிருபாலினி அதிமுகவின் கோவை மாநகர மேயர் வேட்பாளராக உள்ளார்.

 ஏடாகூட விமர்சனம்

ஏடாகூட விமர்சனம்

இதனால், கார்த்திகேயன் திமுகவில் இணைவது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. காரணம், 3 மாதங்களுக்கு முன்புதான், கார்த்திகேயன் இல்ல திருமண விழாவில், எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.. அங்கேயும் சென்று திமுகவை சரமாரியாக விமர்சித்திருந்தார். "கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வெள்ளளூர், பஸ் ஸ்டாண்டை நிலையத்தை இந்த அரசு, கொண்டு வர விடாமல், அங்கு, வேறு பணிகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த திட்டத்தை அரசு மாற்றினால் மக்களை திரட்டி மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி சீறியிருந்தார்.

 ஜஸ்ட் பாஸ்

ஜஸ்ட் பாஸ்

இந்நிலையில், செந்தில் கார்த்திகேயன் நாளைய தினம் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. எனினும், அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டு வரும், இப்போது திமுக பக்கம் சாய்ந்து வருகிறது.. கொங்கு மண்டலத்திலேயே ஓரளவு செல்வாக்கை பெற்றுள்ள பாஜகவுக்கும், திமுகவின் இந்த விஸ்வரூப எழுச்சி, கடுப்பை தந்து வருகிறது. கடந்த தேர்தலில், திமுக ஜஸ்ட் பாஸ் வெற்றியைதான் பெற்றிருந்தது..

 வெட்டி வா + கட்டி வா

வெட்டி வா + கட்டி வா

இதற்கு காரணம், கொங்கு திமுகவின் சறுக்கல்கள்தான்.. எனவே, கொங்குவை பலப்படுத்துவதற்காகவே, மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திமுக பக்கம் கொண்டுவரும் முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே அமைச்சர் செந்தில்பாலாஜி களமிறங்கி வரும் நிலையில், அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.. பாஜக மகளிர் அணி உட்பட, அதிமுகவின் முக்கிய புள்ளிகளும் திமுகவில் இணைந்து வருவது, இரு கட்சிகளுக்குமே எரிச்சலை தந்து வருகின்றன..

English summary
AIADMKs Kovai Senthil Karthikeyan join DMK tomorrow, say sources, Is it true
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X