சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டக்கென மாறும் காட்சிகள்.. அமைச்சர்களின் யோசனையை பட்டென தடுத்து நிறுத்தி.. ஆப்பு வெச்ச அதிமுக தலைமை

அதிமுகவின் அடுத்தடுத்த தேர்தல் அதிரடிகள் நடந்து வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அமைச்சர்களின் ஒருசில யோசனைகளுக்கு அக்கட்சியின் தலைமை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றுகள், அது தொடர்பான விவாதங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, தேர்தல் குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.. தமிழக தேர்தல் அரசியல் களத்தில் கூட்டணிக்கென்று மிக முக்கியமான பங்கு உள்ளது.. பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது கூட்டணிகள்தான்.

AIADMKs new Strategy : TN Assembly Election 2021

இப்போது திமுக, அதிமுக என்ற இரு மெகா கட்சிகளும் எந்த கட்சிகளை தங்கள் கூட்டணியில் தக்கவைப்பது, கழட்டி விடுவது என்ற வேலைகளில் இறங்கிவிட்டன.

தற்போது அதிமுகவில் அது தொடர்பான நித்தம் ஒரு செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்தவகையில் கசிந்த ஒரு செய்தி, அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிடலாம் என்று யோசிக்கிறார்களாம்.

சொந்த தொகுதியை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட்டால், கூடுதல் வாக்குகளை பெறலாம் என்று அவர்கள் கணக்காக இருக்கிறது.ஆனால், இதற்கு அதிமுக தலைமை எடுத்த எடுப்பிலேயே கடிவாளம் போட்டு ஆஃப் செய்துவிட்டதாம்.. தொகுதி மாறி போட்டியிடணும்னு யாருமே நினைக்க கூடாது.

அப்படி தொகுதி மாறினால், அமைச்சர் சொந்த தொகுதியில் எதுவுமே செய்யலையா? ஏன் பயந்துக்கிட்டு, சொந்த தொகுதியில் நிக்காமல், இன்னொரு தொகுதியில் போட்டியிடறாங்க என்று திமுக தரப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துவிடும்.. அதனால், போட்டியிடக்கூடிய அமைச்சர்கள், சிட்டிங் தொகுதியில்தான் இந்த முறையும் போட்டியிடணும்னு உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.

வரும் தேர்தலிலும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணியே தொடரும்.. தினேஷ் குண்டுராவ் உறுதிவரும் தேர்தலிலும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணியே தொடரும்.. தினேஷ் குண்டுராவ் உறுதி

அதேசமயம், பதவி வகித்து வரும் ஒருசில அமைச்சர்களுக்கு, இந்த முறை சீட் கிடையாதுன்னும் முடிவு செய்திருக்கிறதாம்.. அவர்கள் யார் என்று தெரியவில்லை.. இதனிடையே, இந்தியாவின் சிறந்த நிர்வாகங்களை அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சிக்கான நமது அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியின் விளைவாக இது அமைந்திருக்கிறது என்று முதல்வர் பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், இதையும் அதிமுக தங்களுடைய பிரச்சாரத்தில் சாதனையாக ஈடுபடுத்துமோ என்ற கலக்கம் திமுகவை சூழ்ந்துள்ளதாம்.. அதனால் அதற்கு மாற்றாக, தங்களுடைய தேர்தல் வியூகங்களை எப்படி முன்னெடுக்கலாம் என்ற துரித யோசனையிலும் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக வட்டாரமே கலகலத்து காணப்படுகிறது.

English summary
AIADMKs new Strategy : TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X