பிஇ,பிடெக் படிக்க பிளஸ் டூவில் 45% மார்க் போதும்... கணக்கு, இயற்பியல் கட்டாயமல்ல - ஏஐசிடிஇ
பொறியியல் படிப்புக்கு கணிதம் மற்றும் இயற்பியல் கட்டாயம் அல்ல என்ற அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
சென்னை: பிளஸ் டூ தேர்வில் 45% மதிப்பெண் எடுத்தால் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என்றும் பட்டியல் இனத்தவர் 40% எடுத்தால் போதுமானது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு கணிதம் மற்றும் இயற்பியல் கட்டாயம் அல்ல என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
பிளஸ் டூவிற்கு பிறகு என்ன படிக்கலாம் என்று யோசித்துத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் 2021 -22 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை குறித்த விவர குறிப்பேட்டை வெளியிட்டுள்ளது.
இளநிலை பொறியியல் படிப்புகளான பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்கான கல்வித் தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

என்ன படிக்கலாம்
அதாவது பொறியியல் படிப்புல் சேர, இயற்பியல், கணிதம், வேதியியல் , கணினி அறிவியல், மின்னணுவியல் தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ், இன்ஜினியரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ், தொழில்முனைவோர் உள்ளிட்ட படங்களில் எதாவது மூன்று பாடங்கள் படித்திருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

45% சதவிகித மதிப்பெண்
அத்துடன் கணிதம், இயற்பியல் படங்களை எடுக்காதவர்களுக்கு இணைப்பு பாடம் ஒன்று நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வில் 45% மதிப்பெண் எடுத்தால் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என்றும் பட்டியல் இனத்தவர் 40% எடுத்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை
மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டில் கல்லூரியை விட்டு நின்றால் புதிய கல்விக்கொள்கையின் படி திறன் சான்றிதழ் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புக்கு எதிர்ப்பு
தற்போதுள்ள சூழலில் அனைத்து பொறியியல் பட்டங்களுக்கும் கணிதம் ஒரு அடித்தளம் என்பதால் ஏஐசிடிஇ அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கணிதமும் இயற்பியல் படிக்காமல் வரும் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு சிரமமாக இருக்கும் என்றும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications