"தரமான சம்பவம்".. ஒரே போட்டோ.. "வருமா? வராதா??".. கலக்கும் டி-ஷர்ட்.. டென்ஷனில் பாஜக: #AIIMST-Shirt
மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ??’ என்ற அச்சிட்ட டி - ஷர்ட்கள் டிரெண்டாகின்றன
சென்னை: "மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா??" என்ற அச்சிட்ட டி - ஷர்ட்கள், சமூகவலைளதங்களில் டிரெண்டாகி வருகின்றன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில், 2018ம் ஆண்டு பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால் ஜப்பான் நிதி குழுவிடம் இருந்து, நிதி வருவதற்கு தாமதம் ஆவதால் மருத்துவமனை கட்டுமான பணி தாமதப்படுவதாக மத்திய அரசு அப்போது காரணம் தெரிவித்திருந்தது.

டி ஷர்ட்
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, திமுக தரப்பில் நூதனமான எதிர்ப்பு ஒன்று பதிவு செய்யப்பட்டது.. எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானபணி மிக மெதுவாக நடைபெறுகிறது என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவதில்லை என்றும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இழமகிழன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து "மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?" என்ற வாசகத்துடன் கூடிய டீ ஷர்ட் அணிந்துக்கொண்டனர்.

நுரையீரல்
பிறகு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அருகில் உள்ள தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை நுழைவுவாயிலில் 70க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்... இது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.. ஆனால், அதற்கு பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்படவில்லை.. அதற்கான தொகை ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது "எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன என்றும், விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா நேற்று முன்தினம் பேசியிருந்தார்.

கிழவி வெற்றிலை
எய்ம்ஸ் குறித்த நட்டாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.. எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் காம்பவுண்டு சுவரை தவிர வேறு எதையும் காணோமே என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர்.. இதனிடையே, எம்பிக்கள் வெங்கடேசனும், மாணிக் தாகூரும் நேரடியாகவே தோப்பூருக்கு சென்றுவிட்டனர்.. 95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர்.

டி-ஷர்ட்
மதுரை எம்பி வெங்கடேசன், "புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையைக் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கடிதத்தைத் தேடி நானும் மாணிக்கம் தாகூர் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்" என்று நக்கலாக பதிவிட்டிருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில், மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ??' என்ற அச்சிட்ட டி-ஷர்ட்கள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன.. இந்த வாசகம்தான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. அத்துடன் இந்த டி-ஷர்ட்கள் குறித்த போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications