சென்னை அண்ணா சாலையில் சிரித்து பேசிய விமானப் பணிப்பெண்.. ஆட்டோ டிரைவரின் ஒரு நிமிட சலனம்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வேல்புரி சீனிவாச ராவ் என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து, விமான பணிப்பெண் ஒருவரை தனது ஆட்டோவில் அருகில் உள்ள அழகு நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். விமான பணிப்பெண் ஆட்டோ டிரைவரிடம் அன்பாக பேசியுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட ஆட்டோ டிரைவர்,
விமான பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அவரை சிங்கப்பெண் படை போலீசார் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இயல்பாக பேசுவதை சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அப்படி தவறாக புரிந்து கொண்டு பெண்களிடம் அத்துமீறுகிறார்கள். இப்படி ஒரு நிமிடம் சலனத்தால், எல்லை மீறி ஆண்டுக்கணக்கில் பலர் சிறையில் இருக்கிறார்கள். அப்படியான சம்பவம் சென்னை அண்ணா சாலையில் நடந்துள்ளது.

Air hostess chats and laughs on Chennai s Anna Salai A twist for the auto-rickshaw driver

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 48 வயதாகும் வேல்புரி சீனிவாச ராவ் என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். சீனிவாச ராவ் நேற்று முன்தினம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து விமான பணிப்பெண் ஒருவர் தனது ஆட்டோவில் அருகில் உள்ள அழகு நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த விமான பணிப்பெண், வெளிநாட்டை சேர்ந்த விமானம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வேலை நிமித்தமாக சென்னை வந்த அவர், நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அப்போது விமான பணிப்பெண்ணுடன், ஆட்டோ டிரைவர் சீனிவாச ராவ் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சரளமாக பேசியிருக்கிறார்.

விமான பணிப்பெண்ணும், சீனிவாச ராவிடம் பதிலுக்கு அன்பாக பேசினார். இதை தவறாக புரிந்துகொண்ட ஆட்டோ டிரைவர் சீனிவாச ராவ், ஆட்டோவை விட்டு இறக்கிவிட்டபோது விமான பணிப்பெண்ணிடம் கைகுலுக்கி உள்ளார். திடீரென அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத விமான பணிப்பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனால் சீனிவாச ராவ் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுவிட்டார். பட்டப்பகலில் அண்ணாசாலையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக விமான பணிப்பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100க்கு தகவல் கொடுத்தார். தகவல் தெரிந்து அந்த பகுதியில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், விரைந்து வந்து விசாரித்தனர். தப்பி சென்ற சீனிவாச ராவை அவரது ஆட்டோ நம்பரை வைத்து, தேடி கண்டுபிடித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சீனிவாச ராவை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+