"ஆக்ரோஷமான தாக்குதல்.." ஏர் இந்தியாவில் விமான பெண்ணிடம் அத்துமீறிய பயணி.. நடுவானில் பரபரப்பு
சென்னை: நமது நாட்டில் விமானத்தில் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இப்போது ஏர் இந்தியா விமானத்தில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது. நமது நாட்டில் அதிகரிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் மக்கள்தொகையே இதற்கு முக்கிய காரணமாகும்.
கொரோனா காலகட்டம் தவிர மற்ற ஆண்டுகளில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் விமானச் சேவையை இரண்டாம் கட்ட நகரங்களிலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வந்தாலும் கூட விமானங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து சமீப காலமாக வெளியாகும் தகவல் நல்லதாக இல்லை. குடித்துவிட்டு பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம், விமானப் பணிப்பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்வது எனத் தொடர்ச்சியாக மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதேபோல மற்றொரு மோசமான சம்பவம் இப்போது நடந்துள்ளது.
கோவாவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமான பெண்ணை தாக்கியுள்ளார். இந்த பணியை விமானத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய உடன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சமீப காலங்களாகவே விமானத்தில் இதுபோல அத்துமீறி நடந்து கொள்ளும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில், "அந்த குறிப்பிட்ட பயணி முதலில் விமானப் பணியாளர்களைத் திட்டியுள்ளார். அப்போது திடீரென ஒருவர் தாக்கியும் இருக்கிறார். டெல்லியில் விமானம் தரையிறங்கிய பின்னரும் அவர் தொடர்ச்சியாக ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான துறை இயக்குநரகத்திற்கும் இது குறித்துத் தெரிவித்துள்ளோம். எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்.. பயணிகளின் இதுபோன்ற நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நாங்கள் முழு ஆதரவையும் தருவோம்" என்றார்.

இந்த மாத தொடக்கத்தில், ஏர் இந்தியா ஏப்ரல் 10 ஆம் தேதி டெல்லி-லண்டன் விமானத்தில் இரண்டு பெண் பணியாளர்களைத் தாக்க முயன்ற ஒரு பயணி இரண்டு ஆண்டுகள் பறக்கத் தடை விதித்தது. இதுபோல அத்துமீறி நடந்து கொள்ளும் பயணிகள் மீது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிமுறைகளின் விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும்.
பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் 3 வகையாகப் பிரிக்கப்படும்.. உடல் அசைவுகள், விரும்பத் தகாமல் சொல்வது, அளவுக்கு அதிகமாக மது குடிப்பது நிலை 1ஆக வகைப்படுத்தப்படும். தள்ளுவது, உதைப்பது, பாலியல் துன்புறுத்தல் நிலை 2 என வகைப்படுத்தப்படும். விமானத்திற்குச் சேதம், கொலைவெறி தாக்குதல் ஆகியவை நிலை 3ஆகக் கருதப்படும். இதைக் கருத்தில் கொண்டே அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications