1,279 தான் கட்டணம்.. பஸ் டிக்கெட் ரேட்டில் விமானத்தில் போகலாம்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மெகா சலுகை!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு மெகா சலுகையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி பேருந்து கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க முடியும். அதுவும் பண்டிகை நாட்கள் கால கட்டத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பயணிகளுக்கு மெகா ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. Freedom Sale என்ற பெயரில் இந்த சலுகையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்து இருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சுதந்திர தின சலுகையாக இதை அறிவித்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

ரூ 1,279 டிக்கெட் கட்டணம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் மொபைல் செயலி வாயிலாக டிக்கெட் புக் செய்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.1,279 ல் இருந்தே டிக்கெட் புக் செய்யலாம். சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் சலுகை விலை ரூ. 4,279-ல் இருந்து துவங்குகிறது. ஆகஸ்ட் 19 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31, 2026 வரை இந்த சலுகை தொடரும்.
இந்த காலங்களில் ஓணம் பண்டிகை, துர்கா பூஜா, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் என்று தெரிகிறது. மொத்தமாக 50 லட்சம் டிக்கெட்டுகளை இப்படி சலுகை விலையில் வழங்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
பிரீமியம் கேபின் வசதி
பயணிகள், தங்களுடைய லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செக் இன் லக்கேஜ் இல்லாமல் எக்ஸ்பிரஸ் லைட் என்ற சலுகை டிக்கெட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த டிக்கெட்டின் விலை ரூ.1,279 முதல் உள்நாட்டு விமானங்களுக்கு தொடங்குகிறது. சர்வதேச விமானங்களுக்கு ரூ. 4,279 முதல் தொடங்குகிறது.
செக் இன் பேக்கேஜ்களுடன் பயணிப்பவர்களுக்கான சலுகை டிக்கெட் விலை ரூ. 1,379 ல் இருந்தே உள்நாட்டு விமானங்களுக்கு கிடைக்கும். சர்வதேச விமானங்களுக்கு ரூ. 4,479 ல் இருந்து தொடங்குகிறது. சொகுசான பயணத்தை விரும்புபவர்களுக்கு எக்ஸ்பிரஸ் பிஸ் "Xpress Biz" பிரீமியம் கேபின் வசதி வழங்கப்படுகிறது. இதில் 58 இன்ச் வரை சீட் வசதி உள்ளது. இந்த வசதி அண்மையில் ஏர் இந்தியாவில் இணைக்கப்பட்ட 40 புதிய விமானங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், மாணவர்களுக்கு சலுகை
அதேபோல, லாயல்டி புரோகிராம் மெம்பர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் Biz கட்டணத்தில் 25 சதவீத தள்ளுபடி மற்றும் கூடுதல் பேக்கேஜ் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. 'Gourmair' பிராண்டட் மீல்ஸ், மற்றும் சீட் தேர்வு இ முன்னுரிமை சேவைகள் மற்றும் அப்கிரேடுகள் ஆகியவை இதில் அடங்கும்.
மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், ஆயுதப்படை வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கூடுதல் பலன்கள் கிடைக்கும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 116 விமானங்களுடன் தினமும் 500 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. 38 உள்நாட்டு நகரங்கள் மற்றும் 17 வெளிநாடுகளை இணைக்கும் வகையில் நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications
