போகி பண்டிகை.. கடுமையாக மாசு அடைந்த சென்னை.. எங்கும் புகை.. மோசமான நிலையில் காற்று தரக்குறியீடு
சென்னை; போகிப் பண்டிகை கொண்டாட்டம் இடையே பழைய பொருட்களை மக்கள் எரித்த காரணத்தால் கடும் மாசுபாடு ஏற்பட்டது. இதனால் சென்னையில் காற்று மாசு அதிகரித்தது.
போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க இன்று பழைய பொருட்ளை எரித்து போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடினர் .இதனால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பல பகுதிகளில் பகுதியில் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடிய பொதுமக்களால் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை ஏற்பட்டது.

விமான சேவை பாதிப்பு: அந்த வகையில் தற்போது சென்னையில் விமான சேவை கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது.
ஓடுதளம் தெரியாத அளவிற்கு சாலைகளில் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்து வருகிறது. ஹைதராபாத் விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
போகிப் பண்டிகை கொண்டாட்டம் இடையே பழைய பொருட்களை மக்கள் எரித்த காரணத்தால் கடும் மாசுபாடு ஏற்பட்டது. இதனால் சென்னையில் காற்று மாசு அதிகரித்தது.
காற்று தர குறியீடு மோசமான அளவை அடைந்துள்ளது.
ஆலந்தூர் - 124 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது.
அரும்பாக்கம் -- 194 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது.
எண்ணூர் - 217 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது.
கொடுங்கையூர் - 145 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது.
மணலி - 287 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது.
பெருங்குடி - 264 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது.
ராயபுரம் - 201 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது.
போகி என்பது நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாகும். மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்திக்கு முந்தைய நாள் என்று இது அழைக்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
போகி நாளில், மக்கள் பழைய விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய விஷயங்களில் கவனம் செலுத்தி மாற்றம் அல்லது மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள். விடியற்காலையில், மக்கள் வீட்டில் மரக் கட்டைகள், மற்ற திட எரிபொருள்கள் மற்றும் பயனற்ற மர சாமான்களைக் கொண்டு நெருப்பை கொளுத்துவார்கள். இதன் மூலம் ஆண்டுக் கணக்குகள் முடிவடைந்து, மறுநாள் அறுவடையின் முதல் நாளில் புதிய கணக்குகள் தொடங்கும். அதாவது தமிழ் புத்தாண்டும் இதற்கு மறுநாள்தான் தொடங்கும்.
பொங்கல் பண்டிகையின் போது மழை பொழிய வேண்டி இந்தினை மக்கள் வழிபடப்படுவதும் சில பகுதிகளில் வழக்கம். பழையன கழிதலும், புதியன புகுதலுமே பொங்கல் பண்டிகையின் நோக்கம் ஆகும்.
கொங்கு பகுதிகளில் இதே நாளில் காப்பு கட்டு விழாக்கள் நடப்பதும் வழக்கம். போகிக்கு மறுநாள் பொங்கல் செய்து சாப்பிடுவார்கள். மகாராஷ்டிராவில், மக்கள் பஜ்ராவில் செய்யப்பட்ட ரொட்டியை டில் தூவி சாப்பிடுகிறார்கள் மற்றும் காய்கறி குழம்புகளை செய்வார்கள், இதில் பாலக், கேரட், பட்டாணி, பச்சை சானா, பப்டி போன்றவை அடங்கும்.












Click it and Unblock the Notifications