பட்டைய கிளப்பும் ஏர்டெல்.. இன்னும் 4 நாள் தான்.. ரீசார்ஜ் செய்தால் அதிக டேட்டா.. கொட்டுது ஆஃபர் மழை!
சென்னை: ஜியோ நிறுவனம் 3 ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் பலன்கள் வழங்கும் ஆஃபரை அறிமுகம் செய்த நிலையில், ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் பண்டிகை கால ஆஃபரை அள்ளி வழங்கியுள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதி வரை குறிப்பிட்ட பிளான்களை ரீசார்ஜ் செய்தால் எக்ஸ்ட்ரா டேட்டா மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை கூடுதலாக கிடைக்கும். அந்த பிளான்கள் பற்றி பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 8வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை, சில குறிப்பிட்ட பிளான்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஆஃபர்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜியோவின் போட்டி நிறுவனமும், இந்தியாவின் 2 வது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்லும் பண்டிகை கால சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் பண்டிகை கால ஆஃபர்: ஏர்டெல் வழங்கும் பண்டிகை கால சலுகைகளுடன் கூடிய புதிய ரீசார்ஜ் திட்டங்கள் சில நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது செப்டம்பர் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை ரூ.979, ரூ.1029 மற்றும் ரூ.3599 ஆகிய 3 சிறப்பு ரீசார்ஜ் பிளான்களை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே பண்டிகை ஆஃபர் கிடைக்கும்.
ரூ.979 பிளான்: ஏர்டெல்லின் ரூ.979 ப்ரீபெய்டு திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் சன் நெக்ஸ்ட், சோனி லிவ் உட்பட 22க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான இலவச சந்தா ஆகியவை கிடைக்கும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இது தவிர, இந்த பிளானில் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய, 10 ஜிபி டேட்டா கூப்பனும் கிடைக்கிறது. இந்தக் கூப்பன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ரூ. 1,029 பிளான்: ஏர்டெல்லின் ரூ.1029 ப்ரீபெய்டு திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை கிடைக்கும். இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள். இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் சன் நெக்ஸ்ட், சோனி லிவ் உட்பட 22க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான இலவச சந்தா உடன் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய, 10 ஜிபி டேட்டா கூப்பனும் கிடைக்கிறது. கூப்பன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ஏர்டெல் வழங்கும் ரூ. 3599 பிளான்: ஏர்டெல்லின் ரூ.3599 ப்ரீபெய்டு திட்டத்தில், தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதிகள் கிடைக்கும். இந்த பிளானின் வேலிடிட்டி 365 நாட்கள். இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் 22க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான இலவச சந்தா உடன் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய, 10 ஜிபி டேட்டா கூப்பனும் கிடைக்கிறது. கூப்பன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதோடு 3 மாத Apollo 24|7 Circle சந்தா, ரிவர்ட்ஸ் மினி சந்தா, இலவச ஹெலோ டியூன்ஸ் போன்றவற்றையும் ஏர்டெல் வழங்குகிறது.
இந்த பண்டிகை கால சலுகை ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் இணையதளத்தின் வாயிலாகவோ ஜி-பே, போன் - பே உள்ளிட்ட தளங்கள் வாயிலாகவோ, ஏர்டெல் தாங்ஸ் ஆப் வழியாகவோ மேற்கொண்டு ஆஃபர் பலன்களை அனுபவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications