28 நாள் இல்ல.. முழுசா 1 மாசம்.. ஏர்டெல் அறிமுகப்படுத்திய அசத்தலான 3 பிளான்கள்.. இங்க பாருங்க!
சென்னை: இந்தியாவின் 2வது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் 3 பிளான்களை தமது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் 1 மாத வேலிடிட்டியுடன் வந்துள்ளன. இந்த ரீசார்ஜ் பிளான்களின் விலை மற்றும் விவரங்களை பார்க்கலாம்.
ஏர்டெல் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள இந்த 3 பிளான்களின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும். அதாவது, 28 நாட்கள் இல்லாமல், முழுமையாக ஒரு மாதம் வேலிடிட்டி கொண்டதாக இந்த பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மாதம் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்தீர்களோ அடுத்த மாதம் அதே தேதி வரை இந்த பேக்கின் வேலிடிட்டி இருக்கும்.

30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மாதாந்திர திட்டங்களை வழங்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கேட்டு TRAI உத்தரவு வெளியிடப்பட்ட பின்னர், இந்த திட்டங்கள் ஏர்டெல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரீசார்ஜ் பிளான்களின் விவரங்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
ரூ,379 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் வழங்கும் ரூ,379 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இலவசம். மேலும் தினமும் 2 GB டேட்டா கிடைக்கும். மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டாவை உங்களால் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்துடன் Airtel Xstream Play மற்றும் Wynk Music ஆகிய கூடுதல் பலன்களும் கிடைக்கும்.
ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் வழங்கும் ரூ,429 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5 GB டேட்டா கிடைக்கும். இதனுடன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா உடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Apollo 24|7 Circle மற்றும் Wynk Music ஆகியவையும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
ரூ.609 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல்லின் ரூபாய் 609 திட்டத்தை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 60 GB டேட்டாவை மாதம் முழுவதும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தினசரி டேட்டா வரம்பு இல்லை. உங்கள் இஷ்டம் போல 60 ஜிபி வரை டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் மொத்தம் 300 SMS இலவசமாக கிடைக்கும். இதை தவிர Airtel Xstream Play, Apollo 24|7 Circle, மற்றும் Wynk Music போன்ற நன்மைகளும் கூடுதலாக கிடைக்கும்.
Airtel யின் இந்த அனைத்து திட்டங்களும் ஒரு மாத வேலிடிட்டி நன்மையுடன் வரும். இந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம் மேலும் அவை அனைத்தும் பயனர்களுக்கு வரம்பற்ற 5G உடன் வருகின்றன. நீங்கள் OTT நன்மை பெற விரும்பினால், ரூ.379 மற்றும் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் மிக சிறந்த ஆப்ஷனாக இருக்கும் அதே நேரம் உங்களுக்கு அதிகபட்ச டேட்டா பெற விரும்பினால் ரூ,609 ப்ரீபெய்ட் திட்டம் சிறந்ததாக இருக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications