புது பிளானை இறக்கிய ஏர்டெல்.. ரூ.26க்கு கிடைக்கும்.. பழைய விலையில் கூடுதல் டேட்டா.. சூப்பர்ல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏர்டெல் நிறுவனம் ரூ. 26க்கு புதிய கூடுதல் டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது. அதோடு, ரூபாய் 77 மற்றும் ரூபாய் 121 டேட்டா பிளான்களில் கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. எக்ஸ்ட்ரா டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான ஆப்ஷன்.

ஏர்டெல் தமது வாடிக்கையாளர்களின் டேட்டா தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டேட்டா பேக் பிரிவில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு நாள் வேலிடிட்டியுடன் வரும் இந்த பேக்கின் விலை ரூ. 26. குறைந்த விலையில் கூடுதல் டேட்டா பிளானாக இதனை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல். இந்த டேட்டா பேக் தவிர, தற்போதுள்ள பல திட்டங்களிலும் ஏர்டெல் நிறுவனம் மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய டேட்டா பேக் பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம். கூடவே மற்ற பேக்குகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.

airtel jio recharge

ஏர்டெல் ரூ.26 பிளான்: புதிய பேக்கின் விலை 26 ரூபாய். இந்த ரீசார்ஜில், பயனர்கள் ஒரு நாள் வேலிடிட்டியுடன் 1.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இது தவிர, யூசர்கள் ரூ.33க்கு 2 ஜிபி மற்றும் ரூ.49க்கு அன்லிமிட்டெட் டேட்டாவை ஒரு நாள் வேலிடிட்டியுடன் பெறலாம். 1 மணி நேரத்திற்கு அன்லிமிட்டெட் டேட்டாவை வழங்கும் ரூ. 11 பிளானும் இருக்கிறது.

இது மட்டுமின்றி, ஒரு நாள் வேலிடிட்டியுடன் கூடிய பல டேட்டா பேக்குகளை ஏர்டெல் வழங்கி வருகிறது. முன்னதாக, பயனர்கள் ரூ.19க்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த பேக்கின் விலை ஜூலை மாதம் ரூ.22 ஆக உயர்த்தப்பட்டது.

ஏர்டெல்லின் ரூ.77 பிளான்: ரூ.77 டேட்டா பேக்குடன் கிடைக்கும் டேட்டாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 4 ஜிபி கூடுதல் டேட்டா கிடைத்தது. ஆனால் இப்போது இந்த திட்டம் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதே நேரத்தில், அதன் வேடிலிட்டி காலம் ஏற்கனவே உள்ளது போலவே உங்கள் பிளான் முடிவடையும் வரை இருக்கும். இது தவிர, பயனர்கள் Airtel Thanks Appக்குச் சென்று 1 ஜிபி டேட்டாவை கிளைம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ரூ. 77க்கு மொத்தமாக 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல்லின் ரூ.121 பிளான்: ரூ.121 திட்டத்தில், 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 8 ஜிபி வரை டேட்டா இதில் கிடைக்கும். இந்த திட்டமானது, தற்போதுள்ள பிளானின் அதே வேலிடிட்டி உடன் 6 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. மேலும், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், 2 ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறலாம். மொத்தமாக 8 ஜிபி டேட்டா ரூ.121க்கு கிடைக்கும்.

அண்மையில் ஏர்டெல் 3 புதிய பிளான்களை அறிமுகம் செய்தது. அந்த 3 பிளான்களின் வேலிடிட்டி 1 மாதம். அதாவது, 28 நாட்கள் இல்லாமல், முழுமையாக ஒரு மாதம் வேலிடிட்டி கொண்டதாக இந்த பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மாதம் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்தீர்களோ அடுத்த மாதம் அதே தேதி வரை இந்த பேக்கின் வேலிடிட்டி இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+