ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல.. 22 ஓடிடி ஃப்ரீ.. வாடிக்கையாளர்களை தக்கவைக்க ஏர்டெல் வழங்கும் செம பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக ஏர்டெல் நிறுவனம் புதுப்புது பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் 22 ஓடிடி தளங்களுக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷன் உடன் சில பிளான்களை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல். இந்த பிளான்களை பற்றி பார்க்கலாம்.

கடந்த ஜூலை மாதத்தில் தொலைத் தொடர்பு சேவை கட்டணத்தை ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் உயர்த்தின. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் இந்த முடிவால் பொதுத் துறை நெட்வொர்க் நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது.. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகியவை ஜூலை மாதத்தில் தங்களுடைய நிறைய வாடிக்கையாளர்களை இழந்தன.

airtel jio recharge mobile

கட்டண உயர்வுக்கு பிறகு தமது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் நிறுவனம், புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் குறைந்த விலையில் அதிக OTT தளங்களின் சந்தாவை வழங்குகிறது ஏர்டெல். ஏர்டெல் நிறுவனம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அறிமுகம் செய்துள்ள 22 இலவச OTT சப்ஸ்கிரிப்ஷன் வழங்கும் பிளான்களை பற்றி பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.979 பிளான்: ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா (84 நாட்களுக்கு மொத்தம் 168 ஜிபி டேட்டா) , அன்லிமிடெட் லோக்கல், எஸ்.டி.டி, ரோமிங் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 SMS போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்டீம் ப்ளே பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன். அதாவது, 22 OTT தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் இலவசம். Sony LIV, SunNxt, Aha, Lionsgate Play, Chaupal, Hoichoi உள்ளிட்ட 22 ஒடிடி தளங்களில் சினிமா, சீரிஸ்களை இலவசமாக பார்த்து மகிழலாம்.

மேலும் Apollo 24X7 மற்றும் ரிவார்ட்ஸ் மினி சப்ஸ்கிரிப்ஷன், விங்க் மியூசிக் தளத்தில் இலவச ஹெலோ ட்யூன் ஆகியவையும் கூடுதல் போனஸ். மேலும், 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இலவசமாக வரம்பற்ற வகையில் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள்.

ஏர்டெல் ரூ.549 பிளான்: ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதில் லோக்கல் - STD - ரோமிங் அன்லிமிடெட் வாய்ஸ் கால், மற்றும் தினமும் 100 SMS அனுப்ப முடியும். இதை தவிர இந்த திட்டத்தில் Disney+Hotstar சப்ஸ்க்ரிப்சன் 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், sony LIV, சன் நெக்ஸ்ட், ஆஹா உட்பட22 இலவச OTT தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது.

அன்லிமிட்டெட் 5ஜி டேட்டாவை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும், இதில் Apollo 24X7 மற்றும் விங்க் மியூசிக் ஃப்ரீ ஹெலோ ட்யூன் நனமையுடன் வருகிறது இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும்.

ஏர்டெல் ரூ.449 பிளான்: ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதில் லோக்கல் - STD - ரோமிங் அன்லிமிடெட் வாய்ஸ் கால், மற்றும் தினமும் 100 SMS அனுப்ப முடியும். மேலும், sony LIV, சன் நெக்ஸ்ட், ஆஹா உட்பட22 இலவச OTT தளங்களின் ஏர்டெல் எக்ஸ்டீம் ப்ளே ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது.

அன்லிமிட்டெட் 5ஜி டேட்டாவை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும், இதில் Apollo 24X7 மற்றும் விங்க் மியூசிக் ஃப்ரீ ஹெலோ ட்யூன் நனமையுடன் வருகிறது இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும்.

இந்த 3 திட்டங்களுமே 22 ஓடிடி தளங்களின் இலவச சப்ஸ்கிரிஷனுடன் வருகிறது. ரூ. 979 கொண்ட திட்டத்தில் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும். 549 ருபாய் மற்றும் 449 ரூபாய் பிளான்களில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+