காலையிலேயே ஷாக்.. சத்தமின்றி ரீசார்ஜ் ரேட்டை ஏற்றிய ஏர்டெல்! எகிறிய விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொபைல் யூசர்கள் அதிகம் பயன்படுத்தும் நீண்ட கால வாலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் 84 நாள் ப்ரீபெய்ட் பிளானின் விலையை ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி உயர்த்தியுள்ளது. குறிப்பாக தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் இந்த திட்டத்தின் விலை ரூ.859இல் இருந்து ரூ.899 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னணி மொபைல் சேவை வழங்கும் நிறுவனமாக ஏர்டெல் திகழ்ந்து வருகிறது. 5ஜி வருகைக்கு பிறகு அதிக அளவில் பயனர்கள் டேட்டாக்களை பயன்படுத்தி வருவதால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி, 2 ஜிபி முதல் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Airtel business Prepaid

குறிப்பாக ஏறக்குறைய மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தும் 84 நாள் ப்ரீபெய்ட் பிளான் ஏர்டெல் வாடிக்கையாளர்களால் அதிகம் நுகரப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் விலையை சத்தம் இன்றி உயர்த்தி இருக்கிறது ஏர்டெல்.

ஏர்டெல்

முன்னதாக ரூ700 முதல் ரூ.800 வரை உள்ள விலை வரம்பில் ஏர்டெல் நிறுவனம் இரண்டு முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வந்தது. அதில் 799 மற்றும் 859 என்ற இரண்டு திட்டங்களும் இருந்தன. இவை தினமும் 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களாகவும், 77 முதல் 84 நாட்கள் வரை வாலிடிட்டி வழங்கும் வகையிலும் இருந்தன. ஆனால் தற்போது ரூ.859 திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டதால், ரூ.899 ரீசார்ஜ் திட்டம் அந்த விலை வரம்பில் முக்கிய நீண்டகால திட்டமாக மாறியுள்ளது.

ரீசார்ஜ் விலை உயர்வு

இந்த புதிய ரூ.899 "Truly Unlimited" திட்டத்தில் பயனர்களுக்கு பல சேவைகள் வழங்கப்படுகின்றன. உள்ளூர், STD மற்றும் ரோமிங் அழைப்புகள் அனைத்தும் வரம்பில்லாமல் (Unlimited) பேச முடியும். தினமும் 100 SMS அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. அதேபோல் தினமும் 1.5 ஜிபி அதிவேக இணைய டேட்டா வழங்கப்படுகிறது. இந்த தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 64 Kbps வரை குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் சில கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

84 நாள் ப்ளான்

Airtel Rewards மூலம் 12 மாதங்களுக்கு Adobe Express Premium சேவையை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதற்குடன், தேவையற்ற அழைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகளை அடையாளம் காண உதவும் Spam Alerts வசதியும் வழங்கப்படுகிறது. மேலும், இலவச Hellotunes சேவையும் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் 30 நாட்களுக்கு ஒருமுறை தங்களது ரிங்டோனை மாற்றிக் கொள்ள முடியும்.

கேஷ்பேக்

ஆனால் முன்பு ரூ.859 திட்டத்தில் வழங்கப்பட்ட RewardsMini சலுகை தற்போது நீக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த RewardsMini சலுகையின் மூலம் கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் இந்த மாற்றம் குறித்து Airtel நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5G சேவை

இந்த விலை உயர்வு பெரிய அளவில் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டும் செய்யப்பட்டிருப்பதால், உடனடி தாக்கம் மிக அதிகமாக இருக்காது என சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன. அதாவது, இது முழுமையான கட்டண உயர்வு அல்லாமல், படிப்படியாக செய்யப்படும் மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், 5G சேவைகளுக்கு பயனர்களை மாற்றும் நோக்கத்துடன் Airtel நிறுவனம் இந்த மாதிரியான சிறிய மாற்றங்களை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நிறுவனத்தின் சராசரி வருவாய் (ARPU) உயர்த்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

சர்வதேச ரோமிங்

இதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தில் Airtel நிறுவனம் சர்வதேச ரோமிங் திட்டத்தின் விலையையும் உயர்த்தியது. அப்போது Global International Roaming திட்டத்தின் விலை ரூ.,000-இல் இருந்து ரூ.4,999 ஆக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த 84 நாள் திட்டத்திலும் விலை உயர்வு செய்யப்பட்டிருப்பது, எதிர்காலத்தில் மேலும் சில திட்டங்களில் மாற்றங்கள் வரலாம் என்ற பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+