ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக குறைத்த ஏர்டெல்! டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால் மட்டும் உள்ள புது பிளான் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொபைல் டேட்டா வசதி இல்லாத போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக வெறும் வாய்ஸ் கால் மற்றும் மெசேஜ் வசதிகளை கொண்ட ரிசார்ஜ் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டு இருந்தது. வரும் 21 ஆம் தேதியுடன் இதற்கான காலக்கெடு நிறைவு அடைய உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது.

இதன்படி இனிமேல், மொபைல் டேடா தேவையில்லாமல் வெறும் வாய்ஸ் காலுக்காக மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.180, ரூ.203, ரூ.206 ஆகிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

Airtel rolled out three new voice and SMS only prepaid plans

ரீசார்ஜ் கட்டணம்

தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் தற்போது டேட்டா வசதியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளன. இதன்படி குறைந்த பட்ச கட்டணமே மாதம் ரூ.299-க்கு மேல் உள்ளது. இந்தியாவில் தொலைத்தொடர்பு துறை சேவையில் முன்னணி வகிக்கும் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் இத்தகைய ரீசார்ஜ் திட்டங்களையே வைத்துள்ளன.

அன்லிமிட்டெடு வாய்ஸ் கால் வசதியுடன் டேட்டாக்களுக்கு வரம்பும் கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, டேட்டா சேவையை பயன்படுத்த முடியாத சாதாரண செல்போன்கள் வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களும் கூட, டேட்டாவுக்கு என கட்டணம் கொண்ட ரீசார்ஜ் பிளானையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையை கொடுத்தது.

வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ்களுக்கு மட்டும்

வெறும் வாய்ஸ் கால் வசதி மட்டும் வழங்கக் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய் -ம் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, டிராய் அண்மையில் புதிய உத்தரவை பிறப்பித்தது. இதன்படி, மொபைல் டேட்டா வசதி இல்லாத, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டுமே கொண்ட சிறப்புக் கட்டண திட்டங்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும். குறுகிய காலத்திற்கான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.

புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

இதற்கான காலக்கெடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ரூ185, ரூ. 203, ரூ. 206 ஆகிய விலைகளில் புதிய பிரிபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் டேடா தேவையில்லாமல் வெறும் வாய்ஸ் காலுக்காக மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று திட்டங்களுமே வரம்பற்ற அழைப்புகள் பேச முடியும் என்றும் 300 மெசேஜ்களையும் அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.185 கொண்ட பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.203 ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். ரூ.206 திட்டத்திலும் வரம்பற்ற வாய்ஸ்கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.

இந்தத் திட்டம் குறிப்பிட்ட 30 நாட்கள் என்ற காலக்கெடுவுக்குப் பதிலாக, காலண்டர் மாத அடிப்படையில் வேலிடிட்டி இருக்கும். அதாவது, ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் உள்ளதோ அதற்கு ஏற்ப வேலிடிட்டி மாறும். இந்த மூன்று ரீசார்ஜ் பிளான்களிலும் இலவச ஹலோடியூன்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த காலர் டியூனை வைத்துக்கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+