இந்தியாவில் என்ட்ரியான எலான் மஸ்க்.. ஸ்டார்லிங்க் உடன் ஒப்பந்தம்.. ஏர்டெல் நிறுவனத்திற்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த பாரதி ஏர்டெல் ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.இதன் மூலம் எலான் மஸ்க்கின் நிறுவனம் இந்தியாவில் ஏர்டெல் உடன் இணைந்து அதிவேக செயற்கை கோள் இணையதள சேவையை வழங்கப்போவது உறுதியாகி உள்ளது.

இன்று ஏர்டெல் நிறுவனம் முறைப்படி இந்த ஒப்பந்தம் பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஸ்டார்லிங்க்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துவதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த ஒப்பந்தம் நாட்டில் ஸ்டார்லிங்க் சேவைகளை விற்பனை செய்வதற்கான ஸ்பேஸ்எக்ஸிற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்று கூறப்படுகிறது.

Airtel Elon Musk Starlink

ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இந்தியா முழுவதும் இணைய இணைப்பை ஒத்துழைத்து விரிவுபடுத்துவதற்கு விரிவான வழிகளை ஆராயும் என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் அதன் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை விற்பனைக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டார்லிங்கின் அதிவேக செயற்கைக்கோள் இணையத்தை வணிகங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிஜிட்டல் சேவை குறைப்பாட்டை குறைக்க உதவும் வகையில், கிராமப்புற பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் தொலைதூர சமூகங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான இணைய சேவையை கொண்டுவர இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ளன.

Airtel Elon Musk Starlink

தற்போதைய நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் இப்போது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் (2024) செயற்கைக்கோள் இணைய சேவை பூட்டான் நாட்டிற்கு வந்தது. மிக அதிவேக செயற்கை கோள் இணையசேவையான ஸ்டார் லிங்க் இந்தியாவில் வருவது குறித்து கடந்த ஓராண்டாகவே பேசப்பட்டு வந்தது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று வந்த நிலையில், அங்கு எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். அதன்பிறகு அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவையை பொறுத்தவரை 3000 ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது.இதன் விலை அதிகம் என்றாலும், ஃபைபர் அல்லது செல்லுலார் நெட்வொர்க்குகள் இல்லாத இடத்திலும் செயற்கைகோள் இணைய சேவை வேலை செய்யும் என்பது தான் மிகவும் கவனிக்க வேண்டியது ஆகும். அதேபோல் தொலைதூர மற்றும் இணைய சேவை குறைவாக உள்ள மலைபகுதிகளில் மற்றும் கிராம பகுதிகளில் உள்ளவர்களுக்கு இது சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.

ஸ்டார்லிங்க் எப்படி வேலை செய்கிறது?

ஸ்டார்லிங்க் என்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாக இருக்கிறது. கடந்த நிறுவனம் பூமியைச் சுற்றி வரும் வகையில் பூமி சுற்றுப்பாதையில் (LEO) ஏராளமான செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதிய தொழில்நுட்பத்துடன் ஸ்டார்லிங்க் மெகாகான்ஸ்டலேஷனைப் புதுப்பிக்க திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+