அன்று கருணாநிதிக்கு எதிராக.. இன்று தமிழிசையை தட்டி வைக்க.. தொடரும் அஜீத் அதிரடிகள்
Recommended Video

சென்னை: அஜீத்தின் அதிரடி தைரியம் ஏதோ நேற்றோ அல்லது இன்னிக்கோ வந்துவிட்டது என நினைத்து விடாதீர்கள். 2010-ஆம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்தபோதே இவரது தைரியத்தை பார்த்து தன்னை அறியாமல் ரஜினிகாந்தே எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்தார்.
தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருப்பவர் அஜித்குமார். தனது திரைப்படங்களில் இம்மியளவும் அரசியல் கலக்காமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருப்பார். பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்.
அப்படிப்பட்ட அஜீத்தின் திருப்பூர் ரசிகர்கள் நேற்றைய தினம் பாஜகவில் இணைந்தனர். அப்போது அங்கு நடந்த விழாவில் தமிழிசை பேசுகையில் அஜித் மிகவும் நேர்மையானவர், நல்லவர். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளனர் என்றார் தமிழிசை.

சாயம் பூசாதீர்
இதையடுத்து சிறிதும் தாமதிக்காமல் அஜித்குமார் இதற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தனக்கு அரசியலுக்கு வர விரும்பவில்லை. என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கருணாநிதி
இதுபோன்ற அஜித்தின் தைரிய அறிக்கையை நினைத்து மக்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த தைரியம் மற்றவர்கள் சொல்வது போல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகோ, கருணாநிதிக்கு பிறகோ வரவில்லை.

கட்டாயப்படுத்தி
இருவரும் இருந்தபோதே தனது கருத்துகளை ஆணித்தரமாக அடித்துக் கூறியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அஜித் பேசுகையில் இது போன்ற விழாக்களில் நடிகர்களாகிய எங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி அழைக்கின்றனர் என்றார்.

ஜெ. நினைவிடம்
அவரது பேச்சை கேட்டு கருணாநிதிக்கு அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போல் ஜெயலலிதாவிடமும் அஜித்துக்கு நற்பெயர் இருந்தது. அவர் காலமான போது கூட வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித் மறுநாளே வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அரசியல் தலைவர்கள் மீது மரியாதை கொண்டிருந்தாலும் அவர் எப்போதும் அரசியலுக்கு வர நினைக்கவில்லை என்பதற்கு அஜித் விடுத்த அறிக்கை ஒரு சான்றே.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications