சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் பரபரப்பு.. ஒருத்தர் மாஸ்க்.. இன்னொருத்தர் சைக்கிள்.. ரஜினி, கமலை ஓரங்கட்டிய.. "தல, தளபதி"

அஜித், விஜய் இருவரும் இன்று டிரெண்டாகி வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாளில் ரஜினியையும், கமலையும் விஜய், அஜீத் இருவரும் ஓரங்கட்டி உள்ளனர்.. ஒரே நாளில் இவர்கள் 2 பேருமே ட்ரெண்டாகிவிட்டனர்.

ஒரு காலத்தில் தேர்தல் சமயத்தில் வாக்குப் பதிவு என்றாலே, ரஜினியையும், கமலையும்தான் சுற்றிதான் ரசிகர்களின் கவனம் செல்லும்.. இவர்கள் 2 பேரும்தான் 40 வருடம் திரையுலகை கட்டி ஆண்டு கொண்டிருந்தார்கள்.

எம்ஜிஆர் - சிவாஜி ரசிகர்களைவிட, கமல் - ரஜினி ரசிகர்கள் வெளிப்படையாகவே மோதி கொள்வார்கள்.. வெளிப்படையாகவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்து ரோடில் மல்லுக்கட்டி கொள்வார்கள்..

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

இவர்கள் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால், தமிழகமே அன்றைய தினம் திணறி போய்விடும். இவர்களை கட்டுப்படுத்துவது படாதபாடாக இருக்கும்.. போலீசுக்கும் கூடுதல் வேலையாகவும் இருக்கும். ரசிகர்கள்தான் இப்படி இருக்கிறார்களே தவிர, ரஜினியும் கமலும் என்னவோ அப்போதுமுதல் இப்போது வரை நெருக்கமாவே இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்கள்

அன்றைய தினம், இவர்கள் 2 பேரும் ஓட்டுப்போட எங்கு வருவார்கள் என்பதை முன்கூட்டியே பிரபல பத்திரிகையாளர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்.. இவர்களுக்கு எங்கு ஓட்டு இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தில் முன்கூட்டியே கேமிராவுடன் காத்துக்கிடப்பார்கள்.. இன்னொரு பக்கம் ரசிகர்கள் திரண்டு வந்து நின்றிருப்பார்கள்.. ஓட்டுப்போட கமல் வந்தாலும், ரஜினி வந்தாலும், அவர்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பாதுகாப்பு போலீசார் அரணாக நின்றிருப்பார்கள்.

திமுக

திமுக

அதிமுக, திமுகவை தாண்டி, அன்றைய தினம் முழுவதும் பத்திரிகைகளை இவர்கள்தான் ஆக்கிரமித்து இருப்பார்கள்.. ரஜினியையும், கமலையும் சுற்றி பெரும் மீடியா வெளிச்சம், மக்கள் பார்வை விழுந்துகொண்டே இருக்கும்.. ஆனால், இவைகளை நொறுக்கிவிட்டு மேலே வந்தது விஜய்யும், அஜித்தும்தான்.. இவர்கள் வந்த காலகட்டத்தில் மீடியாக்களின் வருகை அதிகமாக வர ஆரம்பித்துவிட்டது.. ரசிகர்களின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்துவிட்டது. கிரேஸ் கூடிவிட்டது.

கமல் - ரஜினி

கமல் - ரஜினி

இவர்களின் ஒவ்வொரு அசைவும், சோஷியல் மீடியாவில் அந்தந்த ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு விடுகிறது.. மக்களிடையே அவைகள் வந்து அடுத்தடுத்த நிமிடமே வந்து சேர்ந்து விடுகின்றன... அதேதான் இன்றும் நடந்துள்ளது.. இன்றுகூட கமலும், ரஜினியும் ஓட்டுப்போட வந்தனர்.. ஆனால், விஜய், அஜீத்தும் அவர்களை முந்திக்கொண்டு வந்து, அந்த இடத்தை தட்டி பறித்து விட்டனர். இன்று நாள் முழுவதும் இவர்கள்தான் டிரெண்டிங்கில் இருக்கிறார்கள்...

நீலாங்கரை

நீலாங்கரை

அஜித் முதல் ஆளாக வந்து தேர்தலில் வாக்களித்தார்... திருவான்மியூர் தொகுதியில் முதல் ஆளாக வாக்களித்தார். வழக்கம்போல, எந்தவித ஈகோவும் இல்லாமல், லைனில் நின்று வாக்களித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி சென்றார்.. அதேபோல, நடிகர் விஜய்யும் நீலாங்கரையில் வாக்களித்தார். சைக்கிளை ஓட்டியபடி வந்து வாக்களித்து திணறடித்துவிட்டார்.. பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்ப்பதற்காக விஜய் சைக்கிளில் வந்தாரா என்ற விவாதம் துவங்கி உள்ளது.

விலைவாசி

விலைவாசி

இந்நிலையில், விஜய் கறுப்பு, சிவப்பு நிறத்திலான சைக்கிளில் கறுப்பு மாஸ்க் அணிந்து வந்து வாக்களித்தார்.. அதேபோல, அஜித் கறுப்பு, சிவப்பு நிறத்திலான முகக்கவசம் அணிந்திருந்தார்.. இவர்கள் எதற்காக இப்படி கறுப்பு & சிவப்பு கலரில் வந்தார்கள் என்ற அடுத்த விவாதமும் தொடங்கி உள்ளது.. அதாவது இந்த நடிகர்களின் செயல்பாடுகள் அரசியல் ரீதியாக பொருத்திப் பார்க்கப்பட்டு வருகின்றன.. இப்படி ஒரே நாளில் இவர்கள் இருவரும் வாக்களித்ததும், அதையொட்டிய ஏற்பட்ட பரபரப்பும் ட்ரெண்டாகி கொண்டே இருக்கிறது...

English summary
Ajith and Vijay symbolic code of black and red
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X