வானதி சீனிவாசனிடம்.. டுவிட்டர்ல கேட்குற கேள்வியா இது.. டென்ஷனே ஆகல.. கூலா கொடுத்தாரு பாருங்க பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் வானதி சீனிவாசன். இவர் பாஜகவின் மகளிர் பிரிவு தேசிய தலைவர் என்ற ஒரு முக்கிய பொறுப்பில் இருக்க கூடியவர்.

Recommended Video

    நெட்டிசன் கேட்ட Valimai Update.. அசத்தல் பதில் கொடுத்த Vanathi Srinivasan

    இந்தத் தொகுதியில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார்.

    இப்படியாக ஏற்கனவே தேர்தல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது கோவை தெற்கு தொகுதி.

    முதல் நாளே இப்படியா

    முதல் நாளே இப்படியா

    இந்தநிலையில், வேட்பாளராக அறிவித்த முதல் நாளிலேயே சமூக வலைத்தளத்திலும் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளார் வானதி சீனிவாசன். இதற்கு காரணம், அவருக்கு ட்விட்டர் தளத்தில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த அதிரடி பதிலும் தான்.

    கோவை தெற்கு தொகுதி

    கோவை தெற்கு தொகுதி

    அப்படி என்ன நடந்தது என்கிறீர்களா? நெட்டிசன் ஒருவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு பின்னூட்டத்தில் மெசேஜ் செய்த மற்றொரு நெட்டிசன், சம்மந்தமே இல்லாமல் வலிமை அப்டேட் எப்போது என்று கேள்வி எழுப்பினார்.

    வலிமை அப்டேட்

    வலிமை அப்டேட்

    அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது கூட சென்னையில் சில அஜித் ரசிகர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களிடம், வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பினர். அந்த அளவுக்கு வலிமை அப்டேட் எப்போ வரும் என்று ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள்.

    அஜித் வெளியிட்ட அறிக்கை

    அஜித் வெளியிட்ட அறிக்கை

    ஒருகட்டத்தில் நடிகர் அஜித் அவரே அறிக்கை வெளியிட்டு.. இதேபோல பொது இடங்களில் படத்தின் அப்டேட் பற்றி பேச வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. ஆனால் இப்போது வானதி சீனிவாசனிடம் அதே மாதிரி ஒரு கேள்வியை கேட்க அதை கண்டுகொள்ளாமல் அவர் கடந்து செல்லவில்லை.

    வானதி சீனிவாசன் பதில்

    இந்த பின்னூட்டத்துக்கு பதில் அளித்துள்ள வானதி சீனிவாசன், "நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி" என்று தெரிவித்துள்ளார். அரசியல் பரபரப்பு நடுவே இப்படி ஒரு அசத்தல் பதிலை வானதி சீனிவாசன் கொடுக்க.. அதை நெட்டிசன்கள் அதிகளவு ஷேர் செய்து வருவதால் வைரலாகி வருகிறது அந்த மெசேஜ்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+