“நாம் எல்லோருமே பொறுப்பு”.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மனம் திறந்த நடிகர் அஜித்குமார்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்துவிட்டது, கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. இந்த ஊடகங்களும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும் என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கார் ரேஸ் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய அவர் சில கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்திருந்தார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் குமார் அளித்திருக்கும் ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதில் கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக அஜித் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். (Ajith on karur incident)
அந்த பேட்டியில், "கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்து விட்டது, கரூர் சம்பவத்திற்கு அந்த தனி நபர் மட்டுமே பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. நமக்கான கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, கூட்டத்தை கூட்டுவதில் வெறி கொண்ட ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும்.
கிரிக்கெட் போட்டிக்கும் கூட்டம் கூடுகிறது, ஆனால் அங்கே இதெல்லாம் நடக்காது. ஏன் இந்த துயரம் தியேட்டரில் மட்டும் நடக்குது? ஏன் சினிமா பிரபலங்களுக்கு மட்டும் நடக்கிறது? இது முழு சினிமா துறையையும் தவறான முறையில் பிம்பப்படுத்துகிறது. ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது.
#Ajithkumar about KARUR STAMPEDE:
— AmuthaBharathi (@CinemaWithAB) October 31, 2025
"There are so much happening in TN because of the stampede. That individual (@actorvijay) itself is not responsible. We all are responsible. We become so obsessed with crowd. It projects whole film industry in Bad light"pic.twitter.com/72idEuXJPe
இந்த மீடியாவும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது. இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும். உங்கள் அன்பைக் காட்டுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றன." என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், "ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது" என அஜித் தெரிவித்துள்ளார்.
-
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications