தேர்தல் ரேஸிலும் முந்திய ஏகே.. முதல் ஆளாக வாக்களித்த அஜித்குமார்! மனைவியுடன் வாக்களித்த சீமான்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தொடங்கி இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் காலை 6:30 மணி முதல் காத்திருந்த நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக தனது வாக்கை செலுத்தி விட்டு சென்றார். வாக்களிப்பதற்காகவே பெல்ஜியத்தில் இருந்து துபாய் வழியாக தமிழகம் வந்த அஜித் குமாரை பார்க்க ரசிகர்கள் கூடியதால் 7 மணிக்கு சற்று முன்னதாகவே அவர் வாக்களிக்க வாக்குச்சாவடி அலுவலர்களும் முகவர்களும் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் நாம் தமிழர் கட்சியின் சீமான், தனது மனைவி கயல்விழியுடன் வாக்கு சேகரித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலை அமைதியாகவும் சீராகவும் நடத்த தேர்தல் அதிகாரிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 14 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்கள் ஆவர்.
தமிழ்நாடு தேர்தல் 2026
அதே நேரத்தில், 85 வயதைக் கடந்த 3.98 லட்சம் மூத்த குடிமக்களும் தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்த உள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் சுலபமாக வாக்களிக்க வசதியாக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து 4,023 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால், பல இடங்களில் கடும் போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் வாக்குப்பதிவு
இந்த தேர்தலில் முக்கியமாக திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுகழ தலைமையிலான கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன. கூடுதலாக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கியுள்ளதால், இந்த முறை பல தொகுதிகளில் நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் மீது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தேர்தல் பிரசாரம்
கடந்த மார்ச் 15ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த தீவிர பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 20) மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அனைத்தும் நேற்று பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு நாளில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் பல கட்டங்களாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்கள் மூலம் மறைமுக பிரசாரம் நடைபெறுகிறதா, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுகிறதா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
மாதிரி வாக்குப்பதிவு
இந்த நிலையில் இன்று 6.30 முப்பது மணிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் சரியாக பதிவாகிறதா என சோதனை செய்யப்பட்டு அதற்கு பிறகு அந்த இயந்திரங்கள் பார்மட் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஏழு மணிக்கு தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நடிகர் அஜித்குமார்
குறிப்பாக சென்னை திருவான்மியூரில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு பல நிமிடங்களுக்கு முன்பே நடிகர் அஜித்குமார் காத்திருந்தார். பெரும்பாலும் படவிழாக்கள் ஷூட்டிங் உள்ளிட்டவற்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என்பதால் நிச்சயம் அவர் வாக்களிக்க வருவார் என தெரிந்து ஏராளமானோர் அங்கு காத்திருந்தனர். அஜித் குமாரை பார்க்க தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் சற்று முன்னதாகவே அஜித் வாக்களிக்க வாக்குச்சாவடி அலுவலர்களும் முகவர்களும் அனுமதி அளித்தனர். இதற்கு பிற கட்சியினரும் ஒப்புக்கொண்டதால் முதல் ஆளாக அஜித்குமார் வாக்களித்துவிட்டு சென்றார். இருந்தபோதும் ஏளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் போலீசார் பாதுகாப்புடன் அவரை அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications