அஜித்குமார் ஓட்டிய மஹிந்திரா ஃபார்முலா ஈ Gen 2 கார்.. அசந்து போன ஆனந்த் மஹிந்திரா.. என்ன காரணம்
சென்னை: நடிகர் அஜித்குமார் ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 (Mahindra Formula E Gen 2) என்கிற மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டினார். இதனால் அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்பெயின், ஸ்பீடு மற்றும் ஸ்டைல். சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் காம்பினேஷன். அஜித்குமாரை ரேஸிங் டிராக்கில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.. சினிமாவில் பெரிய அளவில் சாதித்த அஜித், தற்போது அவருக்கு மிகவும் பிடித்த விஷயமான கார் பந்தயத்திலும் கலந்து கொண்டு சாதித்து வருகிறார். நடிகர் அஜித்குமார், 'அஜித் குமார் ரேசிங்' என்ற பெயரில் சொந்தமாக ஒரு அணியே வைத்துள்ளார். இந்த மூலமாக பிற சர்வதேச ரேசிங் அணிகளுடன் இணைந்தும் பல பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அதில் சிறந்த வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

துபாயில் நடந்த புகழ்பெற்ற '24H துபாய் 2025' போட்டியில் அஜித்குமாரின் அணி பங்கேற்று, 991 பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த ரேஸில் பயிற்சி ஓட்டத்தின்போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக விபத்தைச் சந்தித்த அஜித், விடா முயற்சியுடன் கடும் சவாலுக்கு மத்தியில் பங்கேற்று இந்தச் சாதனை படைத்தார். அஜித் குமுர் சர்வதேசப் பந்தயங்களின் மூலம் 'இந்திய சினிமா' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தனது ரேசிங் காரில் அதற்கான பிரத்யேக லோகோவை வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில், அஜித் ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா டிராக்-கில் மஹிந்திரா ஃபார்முலா ஈ Gen 2 காரை ஓட்டிப் பயிற்சி மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த காரை உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் ரேஸான ஃபார்முலா ஈ (Formula E) போட்டிகளுக்காக மஹிந்திரா ரேசிங் (Mahindra Racing) அணி பயன்படுத்திய ஒரு அதிநவீன மின்சார ரேஸ் கார் ஆகும்.
இந்தக் கார், ஃபார்முலா ஈ தொடரின் Gen2 தலைமுறையை குறிப்பதாக சொல்கிறார்கள். இது மஹிந்திராவின் முந்தைய கார்களை விடப் பல மடங்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் செயல்திறனையும் கொண்டதாக சொல்கிறார்கள்.
இந்த கார் ஸ்டார்ட் செய்ததும் 100 கி.மீ. வேகத்தை சுமார் 2.8 விநாடிகளில் எட்டிவிடும் என்கிறார்கள். அதிகபட்சமாக 280 கி.மீ வேகத்தில் இந்த கார் பயணிக்கும். இந்த காரில் ரேஸ் செல்லும் வீரரின் பாதுகாப்பிற்காக ஹாலோ காக்பிட் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. ஃபார்முலா 1, ஃபார்முலா ஈ, மற்றும் பிற உயர்-வேக ஒற்றை இருக்கை (Single-Seater) பந்தயக் கார்களில் ஓட்டுநரின் தலைக்குப் பாதுகாப்பளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பு தான் ஹாலோ காக்பிட் பாதுகாப்பு அமைப்பு ஆகும். இது மஹிந்திரா ஃபார்முலா ஈ Gen 2 காரில் இருக்கிறது.
மஹிந்திரா ஃபார்முலா ஈ Gen 2 கார், மின்சார ரேஸிங்கில் புதிய வரலாற்றை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் குமார் போன்ற பிரபல நடிகர் மற்றும் ரேஸ் வீரர் இதைப் போன்ற அதிநவீன கார்களை ஓட்டிச் சோதனை செய்வதன் மூலம், இந்தியாவில் மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் பந்தயத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என நம்பலாம்.
இந்நிலையில், மஹிந்திரா நிறுவனரான தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஸ்பெயின், ஸ்பீடு மற்றும் ஸ்டைல். சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் காம்பினேஷன். அஜித்குமாரை ரேஸிங் டிராக்கில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்..
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications