அஜித் குமார் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? பிரைவேட் ஜெட், ஹை கிளாஸ் வீடு! அடேங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் மிக எளிமையான நபர் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ.105 முதல் ரூ.160 கோடி வரை வாங்கும் அஜித் குமார் பல கார்கள், பைக்குகள், தனியார் ஜெட் விமானம் உள்ளிட்டவற்றை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித் குமார். அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன தற்போது 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு குட் பேட் அக்லி படம் வெளியான நிலையில் தற்போது அவர் கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார்.

Ajith Kumar Net Worth Own Private Jet High-End Residence Do You Know

அஜித் குமார் சொத்து மதிப்பு

நடிப்பை தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித் குமார், ரேஸிங் நிறுவனம் ஒன்று தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார். இது போக குடும்பத்தினரோடும் நேரம் செலவழித்து வருகிறார். வாழு வாழ விடு என்ற கொள்கையுடன் இருந்து வரும் அஜித் குமார் தனது ரசிகர் மன்றத்தையும் கலைத்துவிட்டு படங்கள் மற்றும் கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

Ajith Kumar Net Worth Own Private Jet High-End Residence Do You Know

அஜித் குமார் என்றாலே எளிமையின் சிகரம்.. அவரைப் போல எளிமையாக வாழ முடியாது என்று பிரபலங்கள் சொல்வதையும் கேட்டிருப்போம். அதே சமயம் அவரது சொத்து மதிப்பு தற்போது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கார், பைக்குகள், சொகுசு வீடு உள்ளிட்டவையோடு அவரது மொத்த சொத்து மதிப்பு 350 கோடி முதல் 410 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

திருவான்மியூரில் உள்ள வீடு

நடிகர் அஜித் குமாரின் வீடு சென்னை திருவான்மியூரில் உள்ள வால்மீகி நகர் 4-வது சீவாட் சாலையில் அமைந்துள்ளது. வீட்டின் வெளிப்புறத்தை பார்க்கும் போதும் பெரிய ஆடம்பர வீடாக தெரியாவிட்டாலும், மிகுந்து கலைநேயத்தோடும், காற்றோட்டம் அதிகம் உள்ளது போலவும் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Ajith Kumar Net Worth Own Private Jet High-End Residence Do You Know

வெளிப்புறத்தில் நீச்சல் குளம், வரவேற்பு அறையில் எல் வடிவ ஷோபா, நுட்பமான சுவர் ஓவியங்கள், உடற்பயிற்சி கூடம் என அடுக்கிக்கொண்டே போனாலும் அஜித்குமாரின் வீடு எளிதாக பராமரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

அஜித் குமாரிடம் உள்ள கார்கள்

இதே போன்று அஜித் குமாருக்கு ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் இன்னொரு வீடு உள்ளது. இந்த வீடு அதி நவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரிமோட் மூலமாகவே கட்டுப்படுத்த முடியுமாம்.

Ajith Kumar Net Worth Own Private Jet High-End Residence Do You Know

வாகனங்கள் மீது அதீத காதல் கொண்ட அஜித் குமார் ரூ.9 கோடி மதிப்பு கொண்ட பெர்ராரி எஸ்.எஃப் 90 ரக கார், ரூ.3.15 கோடி மதிப்புள்ள போர்ஷே 911 ஜிடி3 ரக கார், ரூ.1.5 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ740 எல்.ஐ கார், ரூ.1.35 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்.எஸ் 350 கார் மற்றும் உயர்ரக லம்போகினி கார் என பல கார்களை அஜித் குமார் வைத்துள்ளார்.

பிரைவேட் ஜெட் விமானம்

பைக் ரேசில் ஆர்வம் காட்டும் அஜித் குமாரிடம், பிஎம்டபிள்யூ கே 1300 எஸ், பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்.ஆர், ஆப்ரில்லா கேப்பனோர்டு 1200 மற்றும் கவாஸாகி நின்ஜா போன்ற பைக்குகளை வைத்துள்ளார்.

இது மட்டும் இன்றி அஜித்குமாருக்கு ரூ.25 கோடி மதிப்பில் சொந்தமாக ஒரு பிரைவேட் ஜெட் விமானம் வைத்துள்ளார். மொத்தமாக அஜித்குமாரின் சொத்து மதிப்பானது ரூ.350 கோடி முதல் ரூ.410 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு படம் ஒன்றிற்கு சம்பளமாக ரூ.105 கோடி ரூபாய் முதல் 165 கோடி ரூபாய் வரை வாங்குவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+