வெற்றி கோப்பையுடன் AK.. பார்சிலோனா கார் பந்தயத்தில் அசத்திய அஜித்குமார் ரேஸிங் அணி – 2ம் இடம்
சென்னை: ஸ்பெயினில் நடந்த 24எச் பார்சிலோனோ சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் GT3 Pro-AM பிரிவில் நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் அணி 2ம் இடம் பிடித்து அசத்தியது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்குமார் ரேஸிங் அணியை உருவாக்கி உள்ளார்.
இவரது அணி 'அஜித் ரெடான்ட் ரேசிங்' மற்றுமு் 'அஜித் ரெட்அண்ட் பை விராஜ்' உள்ளிட்ட பெயர்களில் சர்வதேச ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது ஸ்பயெின் நாட்டில் நடக்கும் ரேஸில் அஜித்குமார் அணி பங்கேற்றது. 'அஜித் ரெட்அண்ட் ரேஸிங்' என்ற பெயரில் அவரது அணி பங்கேற்றது. பிரபலமான சர்க்யூட் டி பார்சிலேன - கடலுன்யாவில் நடந்த GT3 Pro-AM கிளாஸ் போட்டியில் அஜித்குமாரின் 'அஜித் ரெட்அண்ட் ரேஸிங்' அணி 2ம் இடம் பிடித்து அசத்தியது.
இந்த போட்டியில் அஜித் குமார், அவரது அணியை சேர்ந்த மைக்கேல் கிரெனியர் உள்பட இன்னும் 2 பேர் டிரைவர்களாக இருந்தனர். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் அஜித்குமார் அணி 5வது இடமும், Constructors சாம்பியன்ஷிப்பில் 3வது இடமும் பிடித்து சாதித்து காட்டி உள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து போடியம் ஏறி நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது அணி வெற்றி கோப்பையை பெற்றது. நடிகர் அஜித் வெற்றி கோப்பையை உற்சாகமாக உயர்த்தி காட்டினார். பிறகு நம் நாட்டின் தேசியக்கொடியை போடியத்தில் உயர்த்தி காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அஜித் குமார் ரேஸிங் அணியின் இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
