செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்.. கோபமாக முறைத்த அஜித்.. அடுத்த நொடியே நடந்த சம்பவம்? வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற லீ மான்ஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றிருந்தார். அப்போது அவருடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க சென்றபோது அஜித் கோபமாக முறைத்ததாக கூறி, வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ டிரெண்டாகும் நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் அஜித் குமார் இப்போது முழுக்க முழுக்க கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற லீ மான்ஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றிருந்தார். முதல்வர் விஜய் தொடங்கி வைத்த இந்த போட்டியை பார்க்க மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.

Ajith Kumar India Race

அஜித்தின் கோபம்

இது குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. அதில் கையில் செல்போனுடன் ரசிகர் ஒருவர் அஜித்தை நோக்கி வேகமாக வருகிறார். அவர் அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அஜித் அவரை தடுத்து நிறுத்தி, கைகளை இடுப்பில் வைத்தபடி அந்த ரசிகரை கடுமையாக முறைப்பது தெளிவாக தெரிகிறது.

இதையடுத்து அஜித்தின் பாதுகாவலர் அந்த ரசிகரை அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார். ரசிகர் அங்கிருந்து நகரும் வரை அஜித் அவரை தொடர்ந்து முறைப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் பரவியதை தொடர்ந்து, சிலர் அஜித்தின் ரியாக்ஷனை விமர்சித்து வருகின்றனர். ரசிகர்கள் இல்லாமல் ஹீரோக்கள் இல்லை.. ஆர்வமாக செல்ஃபி எடுக்க வருபவரிடம் இதுபோல நடந்த கொள்ளக்கூடாது என சாடி வருகிறார்கள்.

நெட்டின்சன்கள்

நெட்டிசன் ஒருவர், "அஜித் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? இந்த ரசிகர்கள் இல்லாமல் நீங்களும் இல்லை.. உங்கள் குடும்பமும் இல்லை. இந்த அணுகுமுறையை விட்டுவிட்டு ஒரு புன்னகை செய்யுங்கள். அதற்கு ஒன்றும் செலவாகாது" என விமர்சித்துள்ளார். மேலும் ஒருவர், "அஜித் தனது ரேஸ் போட்டிகளுக்காக மற்ற நகரங்களுக்கு செல்லும்போது, அவரை பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ யாரும் வராத நாளுக்காக காத்திருக்கிறேன்" என சாபம் விடும் அளவுக்கு ட்வீட் செய்துள்ளார். ரசிகர் காட்டிய அன்புக்கு.. இவ்வளவு தூரம் முறைக்க தேவையில்லை என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள்

அதேநேரம் அஜித்தின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள். அஜித் ஒருபோதும் ரசிகர்களை மதிக்காமல் இருந்ததில்லை.. போட்டோ செஷனுக்கு எல்லாம் பல மணி நேரம் நின்று போஸ் கொடுப்பவர் அஜித்.. ஆனால், அனுமதி இல்லாமல் ஒருவர் தாங்களாக செல்ஃபி எடுக்க வரும்போதே அஜித் டென்ஷன் ஆவார் என பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த லெ மான்ஸ் பந்தய நிகழ்வில் தான் நடிகர் அஜித் குமாரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தார். அஜித் பங்கேற்ற பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இருவரும் ஒரே இடத்தில் இருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. மேலும், அஜித்துடன் கார் ரேஸ் சூட் அணிந்தும் முதல்வர் விஜய் போஸ் கொடுத்திருந்தார்.

அடுத்த படம்

சினிமாவை பொறுத்தவரை அஜித் குமார் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக அமைந்தது. அதன் பிறகு முழுமையாக கார் ரேஸில் கவனம் செலுத்திய அஜித், அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் டேர் டேவில் படத்தில் நடிக்க உள்ளார். இது அஜித் கதாநாயகனாக நடிக்கும் 64வது படமாகும். இந்தப் படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+