அஜீத் குமாருக்கும் வெற்றி துரைசாமிக்கும் இப்படி ஒரு நட்பா.. சோகத்தில் ஷாலினி பதிவிட்ட இரங்கல்
சென்னை: வெற்றி துரைசாமியின் மறைவால் நடிகர் அஜித்குமார் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். "வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்" என வெற்றி துரைசாமி பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி, தந்தையின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தைக் கவனித்து வந்தார். 'என்றாவது ஒரு நாள்' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் வெற்றி துரைசாமி.

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி,45. இவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் சில நாட்களுக்கு முன்பு இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.5) சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி, சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், காரில் பயணித்த வெற்றி துரைசாமியை காணவில்லை. கடந்த 8 நாட்களாக அவரை தேடி வந்தனர்.
சட்லெஜ் ஆற்றில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்யும் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். முதலில் அவரது உடைமைகள், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றிய நிலையில் 8வது நாளான நேற்று 6 கிலோ மீட்டர் தொலைவில் பாறைக்கு அடியில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து வெற்றி துரைசாமியின் சடலத்தை மீட்டு சிம்லா இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.
வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 5 மணிக்கு பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது. வெற்றி துரைசாமியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதேசமயம் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி எக்ஸ் வலைத்தளத்தில் வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் வெற்றியின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அவருடன் அஜித் இருக்கும் போட்டோவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அஜீத்தின் அருமை நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அஜீத் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications