GBU OTT Release: தெறிக்க விடலாமா? நெட்பிளிக்ஸ்-ல் ஏகேவின் ’குட் பேட் அக்லி’ ரிலீஸ்! இந்த தேதியிலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் வசூலை அள்ளி குவித்த குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி தோல்வியால் விரக்தியில் இருந்த அஜித்குமார் ஆதிக் உடன் இணைந்த குட் பேட் அக்லி படத்தில் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் 10ஆம் தேதி வெளியானது.

அஜித்குமார் உடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, சிம்ரன், ஜாக்கி ஷெரஃப், யோகி பாபு, பிரியா வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

Ajith Kumar OTT cinema

தொடர்ந்து 30 கோடி ரூபாய் வசூலை முதல் நாளே ஈட்டியதாகவும் சொல்லப்பட்டது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வர இருக்கும் நிலையில் படத்தின் வசூல் அதிகரித்ததால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாத நிலையில் இரண்டு மாதங்களில் இரண்டு படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வர இருக்கும் நிலையில் படத்தின் வசூல் 7 நாட்களில் 280 கோடியை தாண்டி உள்ளது.

அதுவும் இந்த வசூல் தமிழ்நாட்டில் மட்டும் தானாம். வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சேர்த்தால் 300 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளி விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் மட்டுமே 300 கோடி ரூபாய் வசூலை எட்டும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ன ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் படத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கும் நிலையில் எப்போது படம் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றிருக்கிறது. தற்போது வசூலில் பட்டைய கிளப்பி வருவதால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

அதாவது நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்னி திரைப்படம் வரும் மே மாதம் எட்டாம் தேதி முதல் நேற்று தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவித்துள்ளனர். மேலும் ஆங்கில சப்டைட்டில் உடனும் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஓடிடியில் தான் படத்தை பார்ப்பேன் என அடம் பிடித்து வந்த அஜித்குமாரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னும் ஒரு வாரம் திரையரங்குகளில் படம் இருந்தால் அதிகாரப்பூர்வமாக 300 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்த்த நிலையில் அஜித் குமாரின் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+