அஜித் பெயரில் போலி இணையதளம்.. ரசிகர்கள் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்த அஜித்தின் மேனேஜர்!
சென்னை: அஜித் குமார் ரேசிங் என்ற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்ட நிலையில், அது, அதிகாரப்பூர்வ இணையதளம் இல்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுப்பு தெரிவித்துள்ளார்,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரஒப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஜித்.

இதற்கிடையே, அஜித்குமார் தனக்கு விருப்பமான கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அஜித்குமார் 24H துபாய் 2025 போட்டியில், பந்தய அணியின் உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 24H துபாய் 2025 மற்றும் போர்ஷே 992 GT3 கோப்பை கிளாசில் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார் அஜித்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், அஜித்குமார் தலைமையிலான அணிக்கு Ajithkumar Racing எனப் பெயரிடப்பட்டு உள்ளது. அஜித் குமார் ரேசிங் கார் பந்தைய அணிக்கு ajithkumarracing.com என்ற புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியானது.
ajithkumarracing.com என்ற இணையதளம் இன்று செயல்பாட்டிற்கு வந்தது. இந்த இணையதளத்தில் அஜித்தின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, இது அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல என தெரிவித்துள்ளார்.

"ajithkumarracing.com என்ற இணையதளம் அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும், தயவுசெய்து இந்த தளத்தை புறக்கணியுங்கள்." என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ajithkumarracing.com இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வரை செயல்பாட்டில் இருந்த இந்த இணையதளம், தற்போது பராமரிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications