சவாதீகா.. விடாமுயற்சி பாடலை கடுமையாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. காரணம் அனிருத்
சென்னை: நடிகர் அஜித் குமார், திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிளாக சவாதீகா பாடல் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. இந்த சவாதீகா பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் ஒன்றாக உள்ளது. யூடியூப்பிலேயே அதிகம் பேரால் கேட்கப்படும் பாடலாக உள்ளது. இந்த பாடலை அஜித் குமார் ரசிகர்கள் வரவேற்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் சமூக வலைதளங்களில் விடாமுயற்சி பாடலை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். இந்த பாடல் மியூசிக் காப்பி அடிக்கப்பட்டதாக கூறி அனிருத்தை விமர்சிக்கிறார்கள்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக 2022ம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியானது. அதன்பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து வரும் பொங்கல் பண்டிக்கையையொட்டி ஜனவரி 10ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாவில் உள்ள அசர்பைஜான் நாட்டில் நடந்தது. மீதமுள்ள காட்சிகள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமேஜி பிலிம்சிட்டியில் நடந்தது. விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வெறும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஆக டீசர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு'சவாதீகா' பாடல் வெளியாகியுள்ளது.
ஆண்டனிதாசன் பாடியுள்ள இந்த பாடலை தெருக்குறல் அறிவு எழுதியுள்ளார். சவாதீகா பாடலில் சீமான் பேசி, இணையத்தில் மீம் டெம்ப்ளேட்டாக வலம் வந்த 'இருங்க பாய்' வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. சவாதீகா பாடலின் லிரிக் வீடியோ (lyric video) யூடியூப்பில் நேற்று வெளியானது. சவாதீகா பாடல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
நடிகர் அஜித்குமார் கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார். கிட்டத்தட்ட பில்லா படத்தின் காலத்திற்கு பிறகு அஜித்குமார் இப்படி உடல் எடை குறைந்து ஸ்மார்ட்டாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே சவாதீகா பாடல் யூடியூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடலை வெறும் 24 மணிநேரத்தில் 40 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 3 லட்சத்து 88 ஆயிரம் பேர் இப்பாடலை லைக் செய்துள்ளனர்.
அதேநேரம் சவாதீகா பாடலின் இசை காப்பி என்று கூறி நெட்டிசன்கள் அனிருத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆவேசம் படத்தில் இருந்து அப்படியே மியூசிக் திருடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆவேசம் படத்தில் இருந்து இல்லுமினாட்டி
பாடல் மியூசிக்கை பயன்படுத்தி உள்ளதாக கூறுகிறார்கள். முன்னதாக அனிருத் இசையமைத்த லியோ உள்பட பல்வேறு பாடங்களின் பாடல்களையும் காப்பி என்று விமர்சித்து வருகிறார்கள். அதேநேரம் அனிருத் ரசிகர்கள், இதனை வீண்பழி சுமத்துவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications