அஜித்குமாரின் 64 ஆவது படம் "டேர் டெவீல்"! தயாரிப்பாளராகிறார் மனைவி ஷாலினி!
சென்னை: மனைவி ஷாலினி தயாரிக்கும் 64 ஆவது படமான டேர் டெவீல் படத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்குகிறார்.
அஜித் கடைசியாக நடித்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்தையும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருந்தார். இதன் பிறகு, அஜித் குமார் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டார். அதனால் எந்த படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.

கார் ரேஸ் போட்டிகள் முடிந்த நிலையில் தற்போது புதிய படத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவரது 64 ஆவது படம் குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் அஜித்குமார் நடிக்கும் 64 ஆவது படத்தை அவரது மனைவி ஷாலினி தயாரிக்கிறார். இவர் இந்த படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். படத்தில் இசையமைப்பாளர் அனிருத். இயக்கம்- ஆதிக் ரவிசந்திரன். இந்த படத்திற்கு பெயர் டேர் டெவீல் என வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்சன்ஸ் என்ற பேனரில் அஜித் நடிக்கிறார். அஜித்தின் கடைசி படமான குட் பேட் அக்லியானது கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதசம் ரிலீஸானது. கிட்டதட்ட ஓராண்டுக்கும் மேலாக அஜித் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு துபாயில் நடந்த கார் ரேஸிங்கில் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார். அது போல் அதே ஆண்டு நடந்த இன்னொரு போட்டியில் Spirit of the Race award -ஐ பெற்றார். இத்தாலியில் நடந்த போட்டியிலும் 3ஆவது இடத்தை பெற்றார். துபாயில் 24 மணி நேர போட்டியில் மேடை ஏறிய போது அஜித்குமார் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்று விருதை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். கார் பந்தயங்களின் போது நிறைய முறை விபத்தில் சிக்கியுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். ஷாலினி ஹீரோயினாக நடித்த முதல் தமிழ் படம் காதலுக்கு மரியாதை. இதையடுத்து அஜித்துடன் 1999-ஆம் ஆண்டு அமர்க்களம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். அமர்க்களம் படத்திற்கு பிறகு நிறம் என்ற மலையாள படத்தில் ஷாலினி நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அத்துடன் குழந்தைகளை கவனித்துக் கொண்டு தனது passion-ஆன பேட்மிண்டனையும் அவ்வப்போது விளையாடி வந்தார். தற்போது 25 ஆண்டுகள் கழித்து தயாரிப்பாளராகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
