‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது.. உற்சாக கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!
சென்னை: அஜித்குமாரின் 50ஆவது படமான 'மங்காத்தா' படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இந்த படம் வரும் 23 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்திற்கான ரீ-ரிலீஸ் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் 'ஜனநாயகன்'பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாத நிலையில், மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்ட விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதை தொடர்ந்து புது படங்கள் சில பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா ஆகியோர் நடித்து 2025 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக வெளியாக உள்ள திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையின் படி தெறி படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.
இதற்கு மத்தியில், அஜித்தின் 'மங்காத்தா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர்.
அஜித்தின் 50-வது படமான இதில் அவர் தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற மங்காத்தா படத்தை தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்கின்றனர். . ஜன. 23-ம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட இருப்பதாக சன்-பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதி ரீ-ரிலீஸாகும் இப்படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications